rohit sharma birthday: hitman: rohit: கடவுள் ஆசிர்வதிக்கட்டும்! ரோஹித் சர்மாவுக்கு கோலி பிறந்தநாள் வாழ்த்து

By Pothy RajFirst Published Apr 30, 2022, 12:10 PM IST
Highlights

rohit sharma birthday : hitman: rohit :இந்திய அணியின் கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமாகிய ரோஹித் சர்மாவின் 35-வது பிறந்தநாளன இன்று முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமாகிய ரோஹித் சர்மாவின் 35-வது பிறந்தநாளன இன்று முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் டெஸ்ட், டி20, ஒருநாள் அனைத்தின் கேப்டனாகவும் ரோஹித் சர்மா இருக்கிறார். விராட் கோலி கடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மிக மோசமாகச் செயல்பட்டதைத் தொடர்ந்தும், ஐசிசி தொடர்களில் ஒரு கோப்பையைக் கூட வெல்லமுடியாததால் அவரிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.

2014 முதல் 2022ம் ஆண்டுவரை கேப்டனாக விராட் கோலி இருந்தும் இதுவரை ஐசிசி சார்பில்ஒரு கோப்பையைக் கூட அணிக்கு பெற்றுத் தராதது பெரிய விமர்சனமாக கோலி மீது வைக்கப்பட்டது. இதையடுத்து ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருவருக்கும் இடையே மறைமுக மோதல் இருப்பதாக பேசப்பட்டு தகவல் வெளியானது. ஆனால், அதை இருவருமே மறுத்தனர். 

இந்நிலையில் ஹிட்மேன் ரோஹித் சர்மா இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள், முக்கிய விஐபிக்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள். 

இந்தச் சூழலில் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராம்பக்கத்தில் ரோஹித் சர்மாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மாவும், கோலியும் சேர்ந்து இருக்குமாறு புகைப்படத்தை பதிவிட்டு கோலி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில் “ பிறந்தநாள் வாழ்த்துகள் ரோஹித் சர்மா. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ரோஹித் சர்மா மனைவி ரித்திகா சஜ்தேவும் தனது கணவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மாவின் புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரித்திகா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனான ரோஹித்சர்மாவுக்கு இந்த சீசன் சோதனைக்காலம். இதுவரை 8 போட்டிகளில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஒரு வெற்றியைக் கூடப் பதிவு செய்யவில்லை. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு இப்படிஒரு நிலையா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அடுத்துவரும் 8 போட்டிகளில் மும்பை அணி வென்றாலும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வது கடினம்தான். இதுவரை ரோஹித் சர்மா இந்த சீசனில் பெரிதாக எந்த இன்னிங்ஸும் ஆடாதது அணிக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இன்று நடக்கும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது

click me!