rcb vs gt 2022 ipl2022 : ஆர்சிபியில் கோலிக்கு ‘கல்தா’? குஜராத் டைட்டன்ஸுடன் இன்று மோதல்: உத்தேச வீரர்கள் யார்?

By Pothy RajFirst Published Apr 30, 2022, 11:40 AM IST
Highlights

rcb vs gt 2022  ipl2022  kohli  : மும்பையில் இன்று நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் வலிமையான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து மோதுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

மும்பையில் இன்று நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் வலிமையான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து மோதுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இந்த ஐபிஎல் டி20 தொடரில் மோசமான ஃபார்மில் தொடர்ந்துவரும் ஆர்சிபி வீரர் விராட் கோலி இந்த போட்டியில் பெஞ்சில் அமரவைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை விராட் கோலி 9 போட்டிகளில் ஆடி, மொத்தம் 128 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், இதில் 2 கோல்டன் டக். இதனால் கோலியின் மீது அழுத்தமும், விமர்சனங்களும் அதிகரித்துள்ளதால், அவருக்குப்பதிலாக இளம் வீரர் யாருக்கேனும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இரு அணிகளுக்குமே இன்றைய ஆட்டத்தில் வெற்றி முக்கியமானது. புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ந்து இடத்தைத் தக்கவைக்கவும், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லவும் வெற்றி அவசியம்.

 அதேநேரம், 10 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணி 3-வது இடத்துக்கு நகர்வதற்கும் வெற்றி தேவை. ஆதலால் இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் பரபரப்பாக இருக்கும்.

ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை விராட் கோலி, டூப்பிளசிஸ், மேக்ஸ்வெல் ஆகியோரின் ஃபார்மைப் பொறுத்தே ஸ்கோர் வரும். இந்த 3 பேரின் பேட்டிங் சராசரி இதுவரை வெறும் 21 ரன்கள் மட்டும்தான். 

இந்த 3பேரும் சொதப்பிவிட்டால் அணியும் படுத்துவிடும். இதில் விராட் கோலி கடந்த 9 போட்டிகளில் ஒரு போட்டியில்கூட ஒழுங்காக ஆடவில்லை என்பதால் இன்று அவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கலாம், அல்லது மாற்றத்துக்காக அமரவைக்ககப்படலாம். 

மேக்ஸ்வெலும் இதுவரை பெரிதாக இன்னிங்ஸ் ஆடவில்லை. டூப்பிளசிஸும் இன்று தனதுஅணியை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதில் ஆபத்பாந்தவனாக அவ்வப்போது நல்ல இன்னிங்ஸ்களை தினேஷ் கார்த்திக் மட்டுமே ஆடி வருகிறார். அனுபவமிக்க இந்த 4 வீரர்களின் ஆட்டம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரை ஏலத்தில் வீரர்கள் தேர்வைப் பார்த்தபோது குழப்பத்துடன் அணியைத் தேர்வு செய்துள்ளார்கள் என்று பேசப்பட்டது. ஆனால், 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் குஜராத் அணி இருக்கிறது. எந்தநேரத்திலும அணியைத் தூக்கி நிறுத்தும் பேட்ஸ்மேன்கள் கடைசிவரை இருப்பது சிறப்பாகும். அதிலும் ரஷித்கான் கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக சிக்ஸர்களை பறக்கவிட்டு வெற்றி பெற வைத்து எதிரணிக்கு மிரட்டல்விடுத்துள்ளார். 

வேகப்பந்துவீச்சில் பெர்குஷன், முகமது ஷமி, அல்சாரி ஜோசப் என 3 வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளன. இதில் பெர்குஷன் இதுவரை 6 போட்டிகளில் பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இந்த ஆட்டத்திலும் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. அல்சாரி ஜோசப் நடுப்பகுதியில் தனது துல்லியமான பந்துவீச்சால் எதிரணிகளுக்கு நெருக்கடி அளி்க்கிறார். 

இது தவிர ஷுப்மான் கில், சஹா கூட்டணி கடந்த ஆட்டத்தைப் போல் இந்த ஆட்டத்திலும் ஜொலிக்க வேண்டியது அவசியம். கேப்டன் நடுவரிசையில் ஹர்திக் பாண்டியா, திவேட்டியா, மில்லர், அபினவ் மனோகர், ரஷித்கான் என பேட்ஸ்மேன்கள் கடைசிவரை உள்ளனர். 
ஆதலால் இன்றைய மும்பை பார்போர்ன் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமானது. முதலில் பேட் செய்யும் அணி 165 ரன்களுக்கு மேல் அடிக்கலாம். இந்த மைதானத்தில் சேஸிங் செய்யும அணி 60சதவீதம் வெற்றிக்கு வாய்ப்பு இருக்கிறது

உத்தேச அணி
குஜராத் டைட்டன்ஸ்: 
விருதிமான் சஹா, ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா, அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் திவேட்டியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப்,யாஷ் தயால்,லாக்கி பெர்குஷன், முகமது ஷமி


ஆர்சிபி அணி
டூப்பிளசிஸ், விராட் கோலி, ராஜத் பட்டிதர், கிளென் மேக்ஸ்வெல், பிரபுதேசாய், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், ஹர்சல் படேல், ஹசரங்கா, ஜோஸ் ஹேசல்வுட், முகமது சிராஜ்

 

click me!