PBKS vs LSG: ரபாடா அபார பவுலிங்.. பஞ்சாப் கிங்ஸுக்கு எளிய இலக்கை நிர்ணயித்த லக்னோ அணி

Published : Apr 29, 2022, 09:37 PM IST
PBKS vs LSG: ரபாடா அபார பவுலிங்.. பஞ்சாப் கிங்ஸுக்கு எளிய இலக்கை நிர்ணயித்த லக்னோ அணி

சுருக்கம்

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவரில் 153 ரன்கள் அடித்து 154 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் கிங்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் ஆடிவருகின்றனர். புனேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயன்க் அகர்வால் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

ஷிகர் தவான், மயன்க் அகர்வால் (கேப்டன்), பானுகா ராஜபக்சா, லியாம் லிவிங்ஸ்டோன், ஜானி பேர்ஸ்டோ, ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், சந்தீப் ஷர்மா.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜேசன் ஹோல்டர், க்ருணல் பாண்டியா, ஆவேஷ் கான், மோசின் கான், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னோய்.
 
முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு டி காக்கும் தீபக் ஹூடாவும் சேர்ந்து அபாரமாக பேட்டிங் ஆடி 2வது விக்கெட்டுக்கு 85 ரன்களை சேர்த்தனர். டி காக் 46 ரன்னிலும், தீபக் ஹூடா 34 ரன்னிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த அனைத்து பேட்ஸ்மேன்களுமே சொதப்பினர்.

க்ருணல் பாண்டியா(7), மார்கஸ் ஸ்டோய்னிஸ்(1), ஆயுஷ் பதோனி(4), ஜேசன் ஹோல்டர் (11) ஆகிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் துஷ்மந்தா சமீராவும் மோசின் கானும் இணைந்து 30 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 153 ரன்கள் அடித்த லக்னோ அணி, 154 ரன்களை பஞ்சாப் கிங்ஸுக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. பஞ்சாப் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேஎல் ராகுல், க்ருணல் பாண்டியா, ஆயுஷ் பதோனி ஆகிய 3 முக்கியமான விக்கெட்டுகளுடன், துஷ்மந்தா சமீராவின் விக்கெட்டையும் ரபாடா வீழ்த்தினார்.
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 15 வயதில் கோடிகளில் புரளும் வைபவ்! IPL-க்கு பின் இரட்டிப்பான பிராண்ட் மதிப்பு!
IPL 2026 Longest Six: சூர்யவன்ஷி சிக்ஸர் மழை பொழிந்தாலும் முதலிடத்தில் இல்லை! டாப் 5 சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள்!