GT vs RCB: இந்த மேட்ச்சிலாவது RCB அணியில் அந்த அதிரடி வீரருக்கு இடம் கிடைக்குமா?இருஅணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Apr 29, 2022, 08:43 PM IST
GT vs RCB: இந்த மேட்ச்சிலாவது RCB அணியில் அந்த அதிரடி வீரருக்கு இடம் கிடைக்குமா?இருஅணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், நாளை(ஏப்ரல் 30) பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன.

இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிதாக களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமாக ஆடி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடித்துவருகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகிறது.

ஆனால் ஆர்சிபி அணி வெற்றி - தோல்விகளை கலவையாக பெற்றுவருகிறது. இதுவரை ஆர்சிபி அணி ஆடிய 9 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது. பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பு ஆர்சிபிக்கு நன்றாகவே உள்ளது. எனவே அதை வலுப்படுத்திக்கொள்ள இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் ஆர்சிபி அணி களமிறங்குகிறது.

இந்த போட்டிக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்வதற்கான அவசியம் இல்லை. எனவே அந்த அணி வழக்கமான ஆடும் லெவன் காம்பினேஷனுடனேயே களமிறங்கும்.

உத்தேச குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், லாக்கி ஃபெர்குசன், யஷ் தயால், முகமது ஷமி.

ஆர்சிபி அணியில் ஒரு மாற்றம் செய்யலாம். சுயாஷ் பிரபுதேசாய் அல்லது ரஜாத் பட்டிதார்க்கு பதிலாக அதிரடி வீரர் மஹிபால் லோம்ராரை சேர்க்கலாம். ராஜஸ்தான் ராயல்ஸுக்காக ஆட கிடைத்த ஒருசில வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி ஆடியிருக்கிறார் லோம்ரார். ரஜாத் பட்டிதார்க்கு கடந்த போட்டியில் தான் ஆட வாய்ப்பு கிடைத்தது. எனவே உடனடியாக அவரை நீக்குவது சரியாக இருக்காது. பிரபுதேசாயை நீக்கிவிட்டு மஹிபால் லோம்ராரை சேர்க்கலாம்.

உத்தேச ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரார், ரஜாத் பட்டிதார், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?