அவருக்கு பேச மட்டும்தான் தெரியும்.. தம்பி தற்காலிகம் தான்..! ஆஸ்திரேலிய கேப்டனுக்கு நாக்கை புடுங்குற மாதிரி பதிலடி கொடுத்த ரிஷப்

By karthikeyan VFirst Published Dec 29, 2018, 12:12 PM IST
Highlights

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது போட்டியில் ரிஷப் பண்ட்டை ஸ்லெட்ஜிங் செய்த டிம் பெய்னுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் பண்ட். 
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது போட்டியில் ரிஷப் பண்ட்டை ஸ்லெட்ஜிங் செய்த டிம் பெய்னுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் பண்ட். 

மெல்போர்னில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 443 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணி வெறும் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 292 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 106 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதையடுத்து 399 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் உள்ளது. 

இந்த போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கும் டிம் பெய்னுக்கும் இடையே நடந்த சம்பவம் சுவாரஸ்யமானது. இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் ரிஷப் பண்ட்டை ஸ்லெட்ஜ் செய்தார். ரிஷப் பண்ட் பேட்டிங் ஆடியபோது, ரிஷப் ஒருநாள் அணியில் புறக்கணிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, தோனி ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். நீ கழட்டிவிடப்பட்டாய். எனவே உனக்கு வேற வேலையில்லை என்றால் பிக் பேஷ் டி20 லீக் போட்டிகளில் வந்து ஆடு என்று சீண்டினார். அத்துடன் நிறுத்தாமல் நானும் என் மனைவியும் திரைப்படத்திற்கு செல்கிறோம். என் குழந்தைகளை பார்த்துக்குறியா? என்று ஸ்லெட்ஜிங் செய்வதாக நினைத்து பேசினார். 

டிம் பெய்னின் ஸ்லெட்ஜிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ரசிகர்கள் டிம் பெய்னுக்கு கடுமையான பதிலடிகளை கொடுத்துவருகின்றனர். 

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் டிம் பெய்ன் பேட்டிங் ஆடியபோது தக்க பதிலடி கொடுத்தார் ரிஷப். மிட்செல் மார்ஷின் விக்கெட்டுக்கு பிறகு டிம் பெய்ன் களத்திற்கு வந்தார். பெய்ன் களத்திற்கு வந்ததுமே வேலையை ஆரம்பித்தார் ரிஷப் பண்ட். பெய்னுக்கு கேட்கும் விதமாக வம்பு இழுத்தார். 

டிம் பெய்ன் கிரீஸில் நின்றபோது, மயன்க்கை கூப்பிட்டு, தற்காலிக கேப்டன் என்ற வார்த்தையை கேள்விப்பட்டதுண்டா மயன்க்..? இவரை அவுட்டாக்க நாம் எதுவும் செய்ய வேண்டாம். அவருக்கு பேச மட்டும்தான் பிடிக்கும். அதைத்தவிர வேறு எதுவும் தெரியாது என்று தக்க பதிலடி கொடுத்தார். 

It was Rishabh Pant's turn for some fun on the stump mic today... pic.twitter.com/RS8I6kI55f

— cricket.com.au (@cricketcomau)

கடைசியில் டிம் பெய்ன் ஜடேஜாவின் பந்தில் ரிஷப்பிடம் கேட்ச் கொடுத்துத்தான் அவுட்டானார். 
 

click me!