உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தகுதிச் சுற்று போட்டியில் கத்தார் அணிக்க் எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.
உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகின்றன. இதில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் கத்தார் அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றாலும், போட்டியானது டிரா செய்யப்பட்டாலும் இந்திய அணி தகுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. மிகவும் பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் ரெஃப்ரியின் தவறான முடிவால் கத்தார் வெற்றி பெற்று உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. இந்திய அணி தோல்வி அடைந்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது.
பாகிஸ்தானை பந்தாடிய ஆரோன் ஜான்சன் – கனடா 106 ரன்கள் குவிப்பு!
போட்டியின் 37ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் லல்லியன்சுவாலா சாங்டே ஒரு கோல் அடித்தார். முதல் பகுதி நேர முடிவில் இந்திய அணி ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. இதே போன்று மீண்டும் 2ஆவது பகுதி நேரமும் இருந்தால் இந்திய அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் என்ற நிலை இருந்தது.
வாழ்வா? சாவா? போராட்டத்தில் பாகிஸ்தான்: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற கடுமையான போராட்டம்!
இந்த நிலையில் தான் 2ஆவது சுற்றின் 73ஆவது நிமிடத்தில் ரெப்ரீயின் தவறான முடிவால் கத்தார் ஒரு கோல் அடித்தது. பந்து எல்லைக் கோட்டை தாண்டி சென்றது. ஆனால், அதனை மீண்டும் உள்ளே கொண்டு வந்த கத்தார் வீரர்கள் ஒரு கோல் அடித்தனர். விதிப்படி இது தவறு. கத்தார் நாட்டில் நடைபெற்ற போட்டி என்பதால் ரெஃப்ரீ கத்தார் அணிக்கு சாதகமாக நடந்து கொண்டுள்ளார்.
போட்டியின் 73ஆவது நிமிடத்தில் இந்திய கோல் கீப்பரான குர்ப்ரீத் சிங் பந்தை எல்லை கோட்டுக்கு வெளியில் அனுப்பினார். பந்து வெளியில் சென்றதால், இந்திய வீரர்கள் ஆட்டத்தை நிறுத்தினர். இந்த நிலையில் தான் கத்தார் வீரர் அல் ஹசன் வெளியில் போன பந்தை உள்ளே அனுப்பிவிட்டார். அப்படி அனுப்பப்பட்ட பந்தை அய்மென் கோலாக மாற்றினார். இதனை தென் கொரியா ரெஃப்ரீ கோல் என்று அறிவித்தார்.
இந்தியா – பாகிஸ்தான் போட்டியை காண வந்த பாகிஸ்தான் யூடியூபர் சுட்டுக் கொலை!
இதன் காரணமாக இரு அணிகளும் 1-1 என்று சமனில் இருந்தன. இதையடுத்து போட்டியின் 85ஆவது நிமிடத்தில் கத்தார் மீண்டும் ஒரு கோல் அடித்து 2-1 என்று முன்னிலை பெற்றது. கடைசி நிமிடம் வரை இந்திய அணி வீரர்கள் கோல் அடிக்காத நிலையில் கத்தார் வெற்றி பெற்று உலகக் கோப்பைக்கு தகுதியும் பெற்றது. இந்த தோல்வியின் மூலமாக 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Football means Qatar nowadays!
Disappointment everywhere. https://t.co/17VVMDvIpi