pv sindhu swiss open badminton: ஸ்விஸ்ஓபன்2022: இந்தியவீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன்

Published : Mar 27, 2022, 05:23 PM IST
pv sindhu swiss open badminton: ஸ்விஸ்ஓபன்2022: இந்தியவீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன்

சுருக்கம்

pv sindhu swiss open badminton:ஸ்விட்சர்லாந்தில் நடந்து வந்த ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

ஸ்விட்சர்லாந்தில் நடந்து வந்த ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். 

பாசல் நகரில் இன்று நடந்த மகளிர் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை பூசானன் ஆங்பாம்ருங்பானை வீழ்த்தி சிந்து கோப்பையைக் கைப்பற்றியுள்ளார். 

மகளிர் பிரிவில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை பூசானானை 21-16,21-8 ஆகிய நேர் செட்களில் வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இந்த ஆண்டு சீசனில் சிந்து கைப்பற்றும் 2-வது சாம்பியன் பட்டம் இதுவாகும். ஜனவரியில் சையத் மோடி சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் சிந்து கோப்பையை வென்றிருந்தார். 

தாய்லாந்து வீாரங்கனை பூசானானுடன் 17 முறை மோதியுள்ள சிந்து அதில் 16 முறை வென்றுள்ளார். ஒருமுறை மட்டுமே 2019ம் ஆண்டு ஹாங்காங்  ஓபனில் மட்டும் சிந்துதோல்வி அடைந்துள்ளார்.

முதல் கேமில் இருவரும் சரிசமமாக மோதினர். 3-3,9-9 என்ற கேம் கணக்கில் சிந்துவுக்கு பூசானன் நெருக்கடி கொடுத்து ஆடினார். ஆனால் சிந்து இரு கேம்புள்ளிகள்எடுத்து 11-9 என்ற முன்னேறியவுடன் வழக்கமான ஆட்டத்துக்கு திரும்பி பூசானனை திணறடித்தார். இறுதியில் 21-16 என்று முதல்செட்டை சிந்து கைப்பற்றினார்

2-வது செட்டில் சிந்து தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி தாய்லாந்து வீராங்கனையை அடக்கினார். ஏறக்குறைய 9 புள்ளிகள் முன்னிலையோடு சிந்து முன்னேறினார். இறுதியாக சிந்து 21-8 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக 2-வது செட்டை வென்றார்

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?