
மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியின் 2-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
15-வது ஐபிஎல் டி20 சீசன் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் இன்று 2-வது லீக் ஆட்டம் நடக்கிறது. முன்னாள் சாம்பியனான மும்பை சாம்பியன்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்குகிறது
டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் முக்கிய வீரர் டேவிட் வார்னர் அணியில்இணையாததால் அவர் விளையாடவில்லை. டெல்லி அணியில் கேப்டன் ரிஷப் பந்த், டிம் ஷீபெர்ட், மன்தீப் சிங், பிரித்வி ஷா, ரோவ்மன் பாவெல், லலித் யாதவ், அக்சர்படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், கலீல் அகமது, கமலேஷ் நாகர்கோட்டி ஆகியோர் உள்ளனர்.
நாகர்கோட்டி, ஷர்துல் தாக்கூர், கலீல் அகமது, ரோவ்மன் பாவல் ஆகிய 4 வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். சுழற்பந்துவீச்சுக்கு குல்தீப் யாதவ், அக்சர் படேல், லலித் யாதவ் ஆகியோர் உள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், கெய்ரன் பொலார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஸ்வின், டைமல் மில்ஸ், பும்ரா, பாசில் தம்பி, திலக் வர்மா, அன்மோல்பிரீத் சிங் ஆகியோர்உள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியும் பும்ரா, மில்ஸ், பாசில் தம்பி ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்கள் டேனியல் சாம்ஸ், பொலார்ட் ஆகிய 2ஆல்ரவுண்டர்களுடன் களமிறங்குகிறது. இதுதவிர முருகன் அஸ்வின், திலக் வர்மா, அன்மோல்ப்ரீத் சிங் ஆகிய சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.