பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் 6ஆவது நாளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான பிவி சிந்து, சாத்விக் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, நிகாத் ஜரீன் மற்றும் சிஃப் கவுர் சம்ரா ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளனர்.
பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரையில் 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதே போன்று கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி இந்தியாவிற்கு 2ஆவது வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தது.
Paris 2024 Olympics: கடைசில பிவி சிந்துவும் தோல்வி – பேட்மிண்டனில் எல்லோருமே வெளியேற்றம்!
undefined
மேலும், துப்பாக்கி சுடுதல் 50மீ ஏர் ரைபிள் 3பி பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் சிங் இந்தியாவிற்கு 3ஆவது வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தது. ஆனால், மற்ற போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது. ஏற்கனவே நீச்சல், டென்னிஸ், படகு போட்டி, ரோவிங், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் பதக்கமே இல்லாமல் வெளியேறியுள்ளது.
இதே போன்று பேட்மிண்டன் போட்டியிலும் லக்ஷயா சென் தவிர பிரணாய் ஹெச் எஸ், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, தணிஷா கிராஸ்டோ மற்றும் அஸ்வினி பொன்னப்பா ஜோடி ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் தான், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பிவி சிந்து எலிமினேஷன் சுற்று போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.
குத்துச்சண்டை – மகளிர்:
மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவு 16ஆவது சுற்று போட்டியில் இந்திய வீராங்கனையான நிகாத் ஜரீன் சீனாவின் வூ யூவை எதிர்கொண்டார். இதில் நிகாத் ஜரீன் 0-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்து காலிறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
வில்வித்தை:
ஆண்களுக்கான தனிநபர் 64ஆவது சுற்று போட்டியில் இந்தியாவின் பிரவின் ரமேஷ் ஜாதவ் சீனாவின் காவோ வென்ஜாவோவிட தோல்வி அடைந்து வெளியேறினார். இதன் மூலமாக வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கான போட்டியில் தீரஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் என்று அனைவரும் தனிநபர் பிரிவில் தோல்வி அடைந்ததோடு, ஒரு அணியாகவும் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளனர்.
துப்பாக்கி சுடுதல்: மகளிர்
மகளிருக்கான 50மீ ஏர் ரைபிள் 3 பொஷிசன்ஸ் தகுதிச் சுற்றுயில் அஞ்சும் மௌத்கில் 584 புள்ளிகள் பெற்று 18ஆவது இடம் பிடித்து வெளியேறினார். இதே போன்று மற்றொரு போட்டியில் சிஃப்ட் கவுர் சர்மா 575 புள்ளிகள் பெற்று 31ஆவது இடம் பிடித்து வெளியேறினார்.
இந்த நிலையில் தான் ஒரே நாளில் இந்தியாவிற்கு இவர்கள் எல்லாம் பதக்கம் வென்று கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிவி சிந்து, சாத்விக் மற்றும் சிராக், நிகாத் ஜரீன், சிஃப் கவுர் ஆகியோர் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளனர்.