
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் 2024 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விஜ்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டியின் ஜோடியானது மலேசியாவின் ஆரோன் சியா டெங் போங் மற்றும் சோ வூய் யிக் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 21-13, 14-21 மற்றும் 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து காலிறுதிப் போட்டியோடு வெளியேறியது.
இதற்கு முன்னதாக குரூப் சுற்று போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்ற முதல் ஜோடி என்ற சாதனையை படைத்தது. எனினும், காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. எனினும் பேட்மிண்டன் தனிநபர் போட்டியில் இந்திய வீரர் லக்ஷய சென் 16ஆவது சுற்று போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் காலிறுதிப் போட்டியில் தைவான் நாட்டைச் சேர்ந்த சோ டியான் சென் உடன் மோதுகிறார்.
இதே போன்று இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும் மகளிருக்கான தனிநபர் போட்டியில் எலிமினேட்டர் சுற்று போட்டியில் பிவி சிந்து சீனாவின் ஹி பிங்ஜியாவோவை எதிர்கொள்கிறார். இதில் சிந்து வெற்றி பெற்றால் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறுவார். தோல்வி அடைந்தால் தொடரிலிருந்து வெளியேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனியைப் போன்று டிக்கெட் செக்கர் வேலை; இந்தியாவிற்கு 3ஆவது பதக்கம் வென்று கொடுத்த ஸ்வப்னில் சிங்!
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.