பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 6ஆவது நாளான இன்று இந்தியா விளையாடிய தடகளம், துப்பாக்கி சுடுதல், ஹாக்கி, குத்துச்சண்டை என்று பல போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் இந்தியா துப்பாக்கி சுடுதல் போட்டியில் மட்டுமே 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 33ஆவது இடத்தில் உள்ளது. மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதைத் தொடர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தது. இந்த நிலையில் தான் 6ஆவது நாளாக இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் 50மீ ஏர் ரைபிள் 3பி பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் சிங் 3ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
undefined
தோனியைப் போன்று டிக்கெட் செக்கர் வேலை; இந்தியாவிற்கு 3ஆவது பதக்கம் வென்று கொடுத்த ஸ்வப்னில் சிங்!
தடகளம்:
காலை 11 மணிக்கு நடைபெற்ற தடகளப் போட்டியில் 20 கிமீ ரேஸ் வாக் போட்டியில் அக்ஷ்தீப் சிங் 6 கிமீ தூரத்திலேயே போட்டியிலிருந்து பின்வாங்கி வெளியேறினார். இதே போன்று விகாஷ் சிங் மற்றும் பரம்ஜீத் சிங் பிஸ்ட் இருவரும் முறையே 30 மற்றும் 37ஆவது இடங்களை பிடித்து வெளியேறினார்.
பிற்பகல் 12.50 மணிக்கு தொடங்கிய மகளிருக்கான தடகள்ப போட்டியில் 20 கிமீ ரேஸ் வாக் போட்டியில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி ஒரு மணி நேரம் 39 நிமிடங்கள் 55 வினாடிகளில் இலக்கை கடந்து 41ஆவது இடம் பிடித்து வெளியேறினார்.
ஹாக்கி:
பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. குரூப் பி சுற்று போட்டியில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. எனினும், நாளை நடைபெறும் மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி நாளை நடைபெறுகிறது.
வில்வித்தை:
ஆண்களுக்கான தனிநபர் 64ஆவது சுற்று போட்டியில் இந்தியாவின் பிரவின் ரமேஷ் ஜாதவ் சீனாவின் காவோ வென்ஜாவோவிட தோல்வி அடைந்து வெளியேறினார். இதன் மூலமாக வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கான போட்டியில் தீரஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் என்று அனைவரும் தனிநபர் பிரிவில் தோல்வி அடைந்ததோடு, ஒரு அணியாகவும் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளனர்.
குத்துச்சண்டை – மகளிர்:
மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவு 16ஆவது சுற்று போட்டியில் இந்திய வீராங்கனையான நிஷாத் ஜரீன் சீனாவின் வூ யூவை எதிர்கொண்டார். இதில் நிஷாத் ஜரீன் 0-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்து காலிறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
துப்பாக்கி சுடுதல்: மகளிர்
மகளிருக்கான 50மீ ஏர் ரைபிள் 3 பொஷிசன்ஸ் தகுதிச் சுற்றுயில் அஞ்சும் மௌத்கில் 584 புள்ளிகள் பெற்று 18ஆவது இடம் பிடித்து வெளியேறினார். இதே போன்று மற்றொரு போட்டியில் சிஃப்ட் கவுர் சர்மா 575 புள்ளிகள் பெற்று 31ஆவது இடம் பிடித்து வெளியேறினார்.
பேட்மிண்டன்:
பேட்மிண்டன் போட்டியில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதிப் போட்டியில் 21-13, 14-21 மற்றும் 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது.
6ஆவது நாளில் இந்தியா பதக்க பட்டியலில் 3 வெண்கலப் பதக்கங்களுடன் 42ஆவது இடத்துல் உள்ளது. இன்னும், 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.