தோனியைப் போன்று டிக்கெட் செக்கர் வேலை; இந்தியாவிற்கு 3ஆவது பதக்கம் வென்று கொடுத்த ஸ்வப்னில் சிங்!

By Rsiva kumar  |  First Published Aug 1, 2024, 4:24 PM IST

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனியைப் போன்று ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகரான ஸ்வப்னில் சிங் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் 3ஆவது வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.


பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான படுத்துக் கொண்டு சுடுதல், ஒரு முட்டியில் அமர்ந்து கொண்டு சுடுதல், எழுந்து நின்று சுடுதல் என்று 50மீ ஏர் ரைபிள் 3 பொஷிசன்ஸ்களில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் சிங் இந்தியாவிற்கு 3ஆவது வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். இதற்கு முன்னதாக மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார். இதே போன்று கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத் சிங் மற்றும் மனு பாக்கர் ஜோடி இந்தியாவிற்கு 2ஆவது பதக்கத்தை வென்று கொடுத்தது.

ஆண்களுக்கான தடகளப் போட்டி – 20கிமீ ரேஸ் வாக்கில் இந்தியா தோல்வி – 6 கிலோ மீட்டரிலேயே வெளியேறிய அக்‌ஷ்தீப் சிங்

Latest Videos

undefined

இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் 50மீ ஏர் ரைபிள் 3பி பிரிவில் இந்தியா சார்பில் ஸ்வப்னில் சிங் போட்டியிட்டார். இதில் முதல் சீரிஸை 9.6 புள்ளிகள் உடன் குசலே தனது ஷுட் கணக்கை தொடங்கினார். அதன் பிறகு முதல் சீரிஸை 50.8 புள்ளிகளுடன் முடித்தார். 2ஆவது சீரிஸை 9.9 புள்ளிகளுடன் ஆரம்பித்து 4 முறை 10 புள்ளிகள் பெற்று கடைசியாக அந்த சீரிஸை 101.7 புள்ளிகளுடன் 6ஆவது இடம் பிடித்திருந்தார்.

கடைசியாக 7 நிமிடம் மட்டுமே இருந்தது. இதில் குசலே 3 முறை 10.5 புள்ளிகளும், 2 முறை 10.6 புள்ளிகளும் பெற்று 5ஆவது இடத்திற்கு முன்னேறினார். இறுதியாக நடைபெற்ற எலிமினேஷனிலிருந்து தப்பித்து 451.4 புள்ளிகள் பெற்று 3ஆவது இடம் பிடித்து இந்திய அணிக்கு 3ஆவது வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்துள்ளார்.

Paris 2024 Olympics: இந்தியா விளையாடும் போட்டிகள் - Day 6: இந்தியாவிற்கு மீண்டும் பதக்கம் கிடைக்குமா?

ஸ்வப்னில் சிங் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 29. கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் வேலை இவருக்கு கிடைத்துள்ளது. இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் டிக்கெட் பரிசோதகராகவே தனது வாழ்க்கையை தொடங்கி, கிரிக்கெட்டியிலும் பயிற்சி பெற்று இந்திய அணியில் இடம் பிடித்தார்.

அதே போன்று ஸ்வப்னில் சிங்கும் டிக்கெட் பரிசோதகராக வாழ்க்கையை தொடங்கி துப்பாக்கி சுடுதலில் பயிற்சியும் பெற்று வந்து தற்போது இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்துள்ளார். இதன் மூலமாக இந்த பிரிவில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை ஸ்வப்னில் சிங் படைத்துள்ளார்.

இந்தியாவிற்கு 3ஆவது பதக்கம் – 50மீ ஏர் ரைபிள் 3பி பிரிவில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரராக குசலே சாதனை!

click me!