பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் தற்போது நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் 50மீ ஏர் ரைபிள் 3 பொஷிசன்ஸ் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே 3ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்று இதில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33ஆவது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 6ஆவது நாளான இன்று துப்பாக்கி சுடுதல் 50மீ ஏர் ரைபிள் 3 பொஷிசன்ஸ் இறுதிப் போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கான தனிநபர் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே 451.4 புள்ளிகள் பெற்று 3ஆவது இடம் பிடித்து இந்தியாவிற்கு 3ஆவது வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலமாக முதல் முறையாக இந்த பிரிவில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை ஸ்வப்னில் படைத்துள்ளார்.
undefined
பிற்பகல் 1 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் 9.6 புள்ளிகள் உடன் குசலே தனது ஷுட் கணக்கை தொடங்கினார். அதன் பிறகு முதல் சீரிஸை 50.8 புள்ளிகளுடன் முடித்தார். 2ஆவது சீரிஸை 9.9 புள்ளிகளுடன் ஆரம்பித்து 4 முறை 10 புள்ளிகள் பெற்று கடைசியாக அந்த சீரிஸை 101.7 புள்ளிகளுடன் 6ஆவது இடம் பிடித்திருந்தார்.
கடைசியாக 7 நிமிடம் மட்டுமே இருந்தது. இதில் குசலே 3 முறை 10.5 புள்ளிகளும், 2 முறை 10.6 புள்ளிகளும் பெற்று 5ஆவது இடத்திற்கு முன்னேறினார். இறுதியாக நடைபெற்ற எலிமினேஷனிலிருந்து தப்பித்து 451.4 புள்ளிகள் பெற்று 3ஆவது இடம் பிடித்து இந்திய அணிக்கு 3ஆவது வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்துள்ளார்.
வில்வித்தையில் அங்கீதா பகத் அதிர்ச்சி தோல்வி – பஜன் கவுர் 16ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்!
இதற்கு முன்னதாக மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார். இதே போன்று கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத் சிங் மற்றும் மனு பாக்கர் ஜோடி இந்தியாவிற்கு 2ஆவது பதக்கத்தை வென்று கொடுத்தது.
ரத்து புற்றுநோய் பாதிப்பு, பொருளாதார சிக்கல் – அன்ஷுமான் கெய்க்வாட் காலமானார்!