பாரிஸ் ஒலிம்பி 2024 தொடர் தொடங்கி 5 நாட்கள் முடிந்த நிலையில் இந்தியா 2 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 37ஆவது இடத்தில் இருக்கிறது. 6ஆவது நாளான ஆகஸ்ட் 1 ஆம் தேதி வில்வித்தை, தடகளம் (மராத்தான் நிகழ்வு), பேட்மிண்டன், குத்துச்சண்டை, ஹாக்கி, கோல்ஃப், படகு போட்டி, துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டிகளில் பங்கேற்கிறது.
ஜூலை 26ஆம் தேதி பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் 2024 தொடர் தொடங்கியது. இதில், பங்கேற்ற ஒவ்வொரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் படகில் அணி வகுப்பு நிகழ்ச்சி நடத்தினர். இந்தியா சார்பில் பிவி சிந்து மற்றும் சரத் கமல் இருவரும் தேசிய கொடியை ஏந்தியபடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தினர். இதையடுத்து 27ஆம் தேதி முதல் போட்டிகள் தொடங்கி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
undefined
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் வில்வித்தை, பேட்மிண்டன், ஜூடோ, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச்சண்டை, கோஃல்ப், நீச்சல், ஹாக்கி, தடகளம், படகு போட்டி என்று 16 விளையாட்டுகளில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.
இதுவரையில் இந்தியா துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார். 3ஆவது இடம் பிடித்த மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இதே போன்று கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான சரப்ஜோத் சிங் மற்றும் மனு பாக்கர் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தது.
வில்வித்தையில் அங்கீதா பகத் அதிர்ச்சி தோல்வி – பஜன் கவுர் 16ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்!
இதன் மூலமாக இந்தியா 2 வெண்கலப் பதக்கம் கைப்பற்றி தற்போது 37ஆவது இடத்தில் இருக்கிறது. சீனா 8 தங்கம், 6 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் உள்பட 16 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் 6ஆம் நாளான ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்தியா வில்வித்தை, தடகளம் (மராத்தான் நிகழ்வு), பேட்மிண்டன், குத்துச்சண்டை, ஹாக்கி, கோல்ஃப், படகு போட்டி, துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டிகளில் பங்கேற்கிறது.
இதில் யார் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள்? இந்தியா பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? என்று பார்க்கலாம் வாங்க…
காலை 11 மணி – தடகளம்
ஆண்களுக்கான 20 கிமீ ரேஸ் வாக்: அக்ஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் பிஸ்ட்
பிற்பகல் 12.30 மணி – கோல்ஃப்
ஆண்களுக்கான முதல் சுற்று – சுபாங்கர் சர்மா, ககன்ஜீத் புல்லர்.
பிற்பகல் 12.50 மணி – தடகளம்
பெண்களுக்கான 20 கிமீ ரேஸ் வாக் – பிரியங்கா கோஸ்வாமி
பிற்பகல் 1 மணி – துப்பாக்கி சுடுதல்
ஆண்களுக்கான 50மீ ஏர் ரைபிள் 3 பொஷிசன்ஸ் இறுதிப் போட்டி – ஸ்வப்னில் குசலே
பிற்பகல் 1.30 மணி – ஹாக்கி
ஆண்களுக்கான குரூப் பி சுற்று – இந்தியா vs பெல்ஜியம்
பிற்பகல் 2.30 மணி – வில்வித்தை
ஆண்களுக்கான தனிநபர் 64ஆவது சுற்று போட்டி – பிரவின் ரமேஷ் ஜாதவ் vs காவோ வென்ஜாவோ
பிற்பகல் 2.30 மணி - குத்துச்சண்டை
மகளிருக்கான 50கிலோ எடைப்பிரிவு சுற்று 16 – நிஷாத் ஜரீன் vs வூ யூ
பிற்பகல் 3.30 மணி – துப்பாக்கி சுடுதல்
மகளிருக்கான 50மீ ஏர் ரைபிள் 3 பொஷிசன்ஸ் தகுதிச் சுற்று - சிஃப்ட் கவுர் சர்மா, அஞ்சும் மௌத்கில்
பிற்பகல் 3.45 மணி – படகு போட்டி
ஆண்களுக்கான பதக்க சுற்று – விஷ்ணு சரவணன்
பிற்பகல் 3.00 மணி - மகளிருக்கான பதக்க சுற்றுகள் – நேத்ரா குமணன்
பிற்பகல் 1.10 மணி – ஆண்களுக்கான பேட்மிண்டன் 16ஆவது சுற்று
பிற்பகல் 1.30 மணி – மகளிருக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி
இரவு 10 மணி – மகளிருக்கான ஒற்றையர் பிரிவு சுற்று 16