#TokyoOlympics பேட்மிண்டன் முதல் சுற்றில் பி.வி.சிந்து அபார வெற்றி..! இஸ்ரேல் வீராங்கனையை ஊதித்தள்ளினார்

By karthikeyan VFirst Published Jul 25, 2021, 8:03 AM IST
Highlights

டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்ட்டன் முதல் சுற்றில் இஸ்ரேல் வீராங்கனை பாலிகர்போவாவை 21-7, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியாவின் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
 

டோக்கியோ ஒலிம்பிக் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இன்று காலை இந்திய நேரப்படி 7.10 மணிக்கு தொடங்கிய மகளிர் ஒற்றையர் பேட்மிண்ட்டன் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, இஸ்ரேலின் ஸெனியா பாலிகர்போவாவை எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே இஸ்ரேல் வீராங்கனை மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய பி.வி.சிந்து, ஆட்டம் முழுவதும் எந்த சூழலிலும் அவரை தன் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கவில்லை. 

முதல் செட்டை 21-7 என வென்ற பி.வி. சிந்து, 2வது செட்டை 21-10  என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
 

click me!