pv sindhu: badminton asia championships: ஆசிய பாட்மிண்டன்: பி.வி.சிந்துவுக்கு வெண்கலம்: அரையிறுதியில் தோல்வி

By Pothy RajFirst Published Apr 30, 2022, 1:26 PM IST
Highlights

pv sindhu: badminton asia championships :பிலிப்பைன்ஸில் நடந்த ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கத்துடன் விடைபெற்றார்.

பிலிப்பைன்ஸில் நடந்த ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கத்துடன் விடைபெற்றார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை யாமகுச்சியிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கத்தை சிந்து வென்றார்.

பிலிப்பைன் தலைநகர் மணிலாவில் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டம் இன்று நடந்தது. இதில் இ்ந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை எதிர்த்து ஜப்பான் வீராங்கனை அகான யாமகுச்சி மோதினார்.

இருவரும் இடையே நடந்த ஆட்டத்தில் யாமகுச்சியிடம் 21-13, 19-21 ,16-21 என்ற செட்களில் போராடி தோல்வி அடைந்தார் சிந்து. ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து வெல்லும் 2-வது வெண்கலப் பதக்கம் இதுவாகும். 

முதல் கேமில் சிந்து தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்கத்திலிருந்தே அபாரமாக ஆடிய சிந்து, 8 புள்ளிகள் முன்னிலையில் சென்றார். 16 நிமிடங்களில் 13-21 என்ற கணக்கில் யாமகுச்சியை வீழ்த்தி முதல் கேமை சிந்து வசமாக்கினார்.

2-வது கேமிலும் சிந்து ஆதிக்கம் செலுத்த வென்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிந்து சர்வீஸ்களிலும், பந்தை திருப்பிஅனுப்புதலிலும் செய்த தவறால் யாமகுச்சி புள்ளிகளைப் பெற்றார். இதனால் ஒருகட்டத்தில் 10-12 என்ற நெருக்கடியான கட்டத்துக்கு சிந்து தள்ளப்பட்டார். அதன்பின் சிந்து விடாது முயன்று ஆடியதில் 19-19 என்று இருவரும் சமநிலை வகித்தனர். ஆனால்சிந்துவின் தவறுகளால் யாமகுச்சி 21 புள்ளிகள் பெற்று கேமைக் கைப்பற்றினார்.

வெற்றியாளரை முடிவு செய்யும் கடைசி கேமில் தொடக்கத்திலிருந்தே யாமகுச்சி ஆத்திக்கம் செலுத்தி 0-3 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தார். சிந்துவும் பதிலடி கொடுக்க ஒரு கட்டத்தில் 7-9 என்ற நிலைக்கு சிந்து முன்னேறினார். ஆனால், அடுத்தடுத்து யாமகுச்சி எடுத்த புள்ளிகளால் முன்னேறினார். சிந்து பின்தங்கினார். ஒரு கட்டத்தில் யாமகுச்சு 20-15 என்றகணக்கில் முன்னிலை வகித்தார்.இறுதியாக 16-21 என்றகணக்கில் சிந்து வீழ்த்தினார் யாமகுச்சி

இதுவரை இருவருக்கும் இடையிலான ஆட்டத்தில் சிந்து 13முறையும், யாமகுச்சி 9 முறையும் வென்றுள்ளனர்.

click me!