
புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு காளைகள், தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ் என்று 12 அணிகள் இடம் பெற்றுள்ளன.
கடைசி வரை போராடிய இந்தியா, சிக்ஸர் அடித்து வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா மகளிர் அணி: 1-1 சமன்!
அகமதாபாத், பெங்களூரு, புனே, சென்னை, நொய்டா, மும்பை, ஜெய்பூர், ஹைதராபாத், பாட்னா, டெல்லி, கொல்கத்தா, பஞ்ச்குலா ஆகிய பகுதிகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சென்னையில் நடந்த 4 போட்டியிலும் தமிழ் தலைவாஸ் தோல்வி அடைந்துள்ளது. இதுவரையில் தமிழ் தலைவாஸ் 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 2ல் வெற்றி, 8 போட்டிகளில் தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 11ஆவது இடத்தில் உள்ளது.
தட்டு தடுமாறி 130 ரன்கள் எடுத்த இந்திய மகளிர் அணி – ஆஸிக்கு 131 ரன்கள் வெற்றி இலக்கு!
இந்த நிலையில் தான் நேற்று 60ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் புனேரி பல்தான் அணியின் கேப்டன் ஆல்ரவுண்டர் அஸ்லாம் முஷ்தாபா 19 ரைடுகள் சென்று 3 ரைடுகளை வெற்றிகரமாக முடித்து 5 புள்ளிகள் பெற்றார். இதே போன்று ரைடர் பங்கஜ் மோஹிதே 10 ரைடுகள் சென்று 3 ரைடுகளை வெற்றிகரமாக முடித்து 3 புள்ளிகள் பெற்றுள்ளார்.
இவரைத் தொடர்ந்து மற்றொரு ரைடர் மோஹித் கோயட் 13 ரைடுகள் சென்று 4 ரைடுகளை வெற்றிகரமாக முடித்து 3 புள்ளிகள் பெற்றார். இப்படி அடுத்தடுத்து புனேரி பல்தான் அணி புள்ளிகள் பெற்று முன்னிலை பெற்றது. ஆனால், தமிழ் தலைவாஸ் அணியில் டிஃபெண்டர் 5 ரைடுகள் சென்று ஒரு ரைடை வெற்றிகரமாக முடித்து ஒரு புள்ளிகள் பெற்றார். இதே போன்று அஜிங்க்யா பவார் 11 ரைடுகள் சென்று 3 ரைடுகளை வெற்றிகரமாக முடித்து 3 புள்ளிகள் பெற்றார். கடைசி வரை போராடிய தமிழ் தலைவாஸ் அணியானது 3 புள்ளிகளில் வெற்றியை கோட்டைவிட்டது. இறுதியாக புனேரி பல்தான் 29 – 26 புள்ளிகள் பெற்று 3 புள்ளிகளில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியோடு தமிழ் தலைவாஸ் 8வது தோல்வியை அடைந்துள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற வேண்டும் – கங்குலி!
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.