ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி ஒரே ஒரு டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா மகளிர் அணி 3-0 என்று கைப்பற்றி இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது.
இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது. இதையடுத்து தொடரை தீர்மானிக்கும் 2ஆவது டி20 போட்டி தற்போது நேவி மும்பையில் நடந்து வருகிறது.
இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 1 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மிருதி மந்தனா 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற வேண்டும் – கங்குலி!
அதன் பிறகு வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 6 ரன்களில் ஆட்டமிழக்க, விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் வந்த பூஜா வஸ்த்ரேகர் 9, அமன்ஜோத் கவுர் 4 என்று வரிசையாக ஆட்டமிழக்க கடைசியாக தீப்தி சர்மா 30 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது.