ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்… 2 வெற்றிகளை பெற்று தங்க நாயகன் ஆனார் புதுக்கோட்டை லட்சுமணன்…

First Published Jul 10, 2017, 6:45 AM IST
Highlights
pudukottai lakshmanan won 2 gold medals


ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்… 2 வெற்றிகளை பெற்று தங்க நாயகன் ஆனார் புதுக்கோட்டை லட்சுமணன்…

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற  22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில்  புதுக்கோட்டையைச் சேர்ந்த லட்சுமண்,  முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

ஒடிசாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஒரே நாளில் 4 தங்கம்  வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் 22-வது  ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் இந்தியா
சீனா, ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில், ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அஜய்குமார், 400 மீட்டர்
ஓட்டப்பந்தயத்தில் கேரள வீரர் முகமது அனாஸ், மகளிர் பிரிவிற்கான 400 மீட்டர் ஓட்டபந்தயத்தில் நிர்மலா செரோனும், 1,500 மீட்டர்
ஓட்டத்தில் சித்ராவும் தங்கம் வென்று சாதனை படைத்தனர். மேலும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் ஆரோக்கியா
வெள்ளியும், ஜிஸ்னா மேத்யூ வெண்கலமும் வென்றனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற 10000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வுதுக்கோட்டை வீரர் லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்றார்.

இதன்மூலம், இம்முறை 2வது தங்கம் வென்றார். முன்னதாக 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார்.

தவிர இது, ஆசிய தடகளத்தில் இவரது 4வது பதக்கம். கடந்த 2015ல் சீனாவின் உகான் நகரில் நடந்த ஆசிய தடகளத்தில் ஒரு வெள்ளி (10,000 மீ.,), ஒரு வெண்கலம் (5,000 மீ.,) கைப்பற்றினார்.
 

click me!