மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மைதானத்திற்குள் வந்து விழுந்த காத்தாடியை எடுத்து ரோகித் சர்மா, ரிஷப் பண்டிடம் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் 43ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணியில் ஜாக் பிரேசர் மெக்கர்க் அதிரடியாக விளையாடிய ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஆனால், அவர் 27 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 84 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதே போன்று அபிஷேக் போரெல் 36 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு ஷாய் ஹோப் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினர். இதில், ஷாய் ஹோப் 41 ரன்கள் சேர்க்க, பண்ட் 29 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அக்ஷர் படேல் காம்போ கடைசியில் அதிரடி காட்ட, டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் குவித்தது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் லூக் உட் 4 ஓவர்களில் ஒரு விக்கெட் எடுத்து 68 ரன்கள் கொடுத்தார். நுவான் துஷாரா 56 ரன்கள் கொடுத்தார். ஹர்திக் பாண்டியா 2 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்தார். பும்ரா, சாவ்லா மற்றும் நபி தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், டெல்லி அணியில் லிசாட் வில்லியம்ஸ் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தை வீச வரும் போது, ஷூ வழுக்கி கீழே விழுந்தார். அதன் பிறகு வேறு ஷூ மாற்றினார். முதல் பந்தில் ரன் எடுக்காத இஷான் கிஷான், 2ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3ஆவது பந்தில் ரோகித் சர்மா 2 ரன் எடுத்தார். அப்போது மைதானத்திற்குள் பறந்து வந்த காத்தாடி ரோகித் சர்மா கைக்கு சென்றது. அதனை எடுத்து ரிஷப் பண்ட்டிடம் கொடுத்தார்.
ரிஷப் பண்ட் அந்த காத்தாடியை பறக்கவிட முயற்சித்தார். அதன் பிறகு ஸ்கொயர் லெக் அம்பயரிடம் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Rohit Sharma & Rishabh Pant enjoy a light moment flying kites during a cricket match! 😂💙
pic.twitter.com/pK4w6NtcHK