
கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகளுக்கு முறையே ஐபிஎல், ஐ.எஸ்.எல் என லீக் தொடர்கள் நடத்தப்படும் நிலையில், அதேபோலவே இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டான கபடி விளையாட்டை வளர்க்கும் விதமாகவும், கபடி வீரர்களை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் விதமாகவும் ப்ரோ கபடி தொடர் நடத்தப்பட்டுவருகிறது.
கடந்த 2014ம் ஆண்டு ப்ரோ கபடி தொடங்கப்பட்டு, இதுவரை 8 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், 9வது சீசன் நாளை(அக்டோபர் 7) தொடங்குகிறது. 12 அணிகள் கலந்துகொண்டும் ஆடும் ப்ரோ கபடி போட்டிகள் பெங்களூரு, புனே, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடக்கவுள்ளன.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ப்ரோ கபடி போட்டிகளை பார்க்கலாம். டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ ஆப்-பிலும் ஆன்லைனில் பார்க்கலாம்.
இதையும் படிங்க - ப்ரோ கபடி 9வது சீசன் போட்டிகளை எந்தெந்த சேனல்களில் பார்க்கலாம்..? லைவ் ஸ்ட்ரீமிங் விவரம்
ப்ரோ கபடி தொடரில் கலந்துகொண்டு ஆடும் 12 அணிகளின் உரிமையாளர், கேப்டன், பயிற்சியாளர் விவரங்களை பார்ப்போம்.
1. தமிழ் தலைவாஸ்
உரிமையாளர் - மேக்னம் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
கேப்டன் - பவன் குமார் செராவத்
பயிற்சியாளர் - ஜே. உதய் குமார்
2. பெங்கால் வாரியர்ஸ்
உரிமையாளர் - பெர்த்ரைட் கேம்ஸ் & எண்டர்டெய்ன்மெண்ட்
கேப்டன் - மனிந்தர் சிங்
பயிற்சியாளர் - காசிநாதன் பாஸ்கரன்
3. பெங்களூரு புல்ஸ்
உரிமையாளர் - காஸ்மிக் க்ளோபல் மீடியா
கேப்டன் - மஹேந்தர் சிங்
பயிற்சியாளர் - ரந்தீர் சிங் செராவத்
4. டபாங் டெல்லி
உரிமையாளர் - ராதா கபூர்
கேப்டன் - நவீன் குமார் கோயட்
பயிற்சியாளர் - கிருஷாண் குமார் ஹூடா
5. குஜராத் ஜெயிண்ட்ஸ்
உரிமையாளர் - அதானி வில்மர் லிமிடெட்
கேப்டன் - சந்திரன் ரஞ்சித்
பயிற்சியாளர் - ராம் மேஹார் சிங்
6. ஹரியானா ஸ்டீலர்ஸ்
உரிமையாளர் - ஜேஎஸ்டபிள்யூ க்ரூப்
கேப்டன் - ஜோகிந்தர் நர்வால்
பயிற்சியாளர் - மன்ப்ரீத் சிங்
7. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
உரிமையாளர் - அபிஷேக் பச்சன்
கேப்டன் - சுனில் குமார்
பயிற்சியாளர் - சஞ்சீவ் பாலியான்
8. பாட்னா பைரேட்ஸ்
உரிமையாளர் - ராஜேஷ் ஷா
கேப்டன் - நீரஜ் குமார்
பயிற்சியாளர் - ரவி ஷெட்டி
9. புனேரி பல்தான்
உரிமையாளர் - இன்சூர்கோட் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
கேப்டன் - ஃபாஸெல் அட்ராசாலி
பயிற்சியாளர் - பிசி.ரமேஷ்
இதையும் படிங்க - ப்ரோ கபடி 9வது சீசன்: எந்தெந்த அணிகள் எப்போது மோதுகின்றன..? முழு போட்டி அட்டவணை
10. தெலுங்கு டைட்டன்ஸ்
உரிமையாளர் - வீரா ஸ்போர்ட்ஸ்
கேப்டன் - ரவீந்தர் பஹல்
பயிற்சியாளர் - வெங்கடேஷ் குட்
11. யு மும்பா
உரிமையாளர் - யுனிலேஸர்ஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்
கேப்டன் - அறிவிக்கப்படவில்லை
பயிற்சியாளர் - அனில் சப்ரனா
12. உ.பி. யோதாஸ்
உரிமையாளர் - ஜி.எம்.ஆர் க்ரூப்
கேப்டன் - நிதேஷ் குமார்
பயிற்சியாளர் - ஜஸ்வீர் சிங்
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.