
புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், யு.பி யோதாஸ், பெங்களூரு புல்ஸ் ஆகிய 4 அணிகள் இந்த சீசனில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
இன்று நடந்த முதல் போட்டியில் யு.பி யோதாஸ் மற்றும் யு மும்பா அணிகள் மோதின.ஹைதராபாத்தில் நடந்த இந்த போட்டியில் ஆரம்பம் முதலே யு மும்பா அணி மீது ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய யு.பி யோதாஸ் அணி 38-28 என்ற கணக்கில் யு மும்பாவை வீழ்த்தி வெற்றி பெற்ற யு.பி யோதாஸ் அணி புள்ளி பட்டியலில் 3ம் இடத்திற்கு முன்னேறியது.
BAN vs IND: ரிஷப் பண்ட்டுக்கு இதுவே கடைசி சான்ஸ்..! சொதப்பினால் இந்திய அணியில் இடம் காலி
அடுத்த போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி பரபரப்பாக இருந்தது. இரு அணிகளும் சிறப்பாக ஆடிய நிலையில், கடைசியில் 40-34 என்ற கணக்கில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
புள்ளி பட்டியலில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி முதலிடத்தில் நீடிக்கிறது. புனேரி பல்தான் அணியும் 2வது இடத்தில் வலுவாக இருக்கிறது. இன்றைய போட்டியில் ஜெயித்த யு.பி யோதாஸ் அணி 3ம் இடத்திற்கு முன்னேறியது. பெங்களூரு புல்ஸ் அணி 4ம் இடத்திற்கு பின் தங்கியது. 5வது இடத்தில் தமிழ் தலைவாஸ் அணி உள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.