BAN vs IND: ரிஷப் பண்ட்டுக்கு இதுவே கடைசி சான்ஸ்..! சொதப்பினால் இந்திய அணியில் இடம் காலி

By karthikeyan V  |  First Published Dec 2, 2022, 9:54 PM IST

வங்கதேசத்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ரிஷப் பண்ட்டை 3 போட்டிகளிலும் ஆடவைத்து, அவர் மீண்டும் சொதப்பினால் அணியிலிருந்து ஓரங்கட்டிவிடலாம். ஆனால் வங்கதேச தொடரில் அவரைத்தான் ஆடவைக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
 


ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என 2 பெரிய ஐசிசி தொடர்களில் அடுத்தடுத்து தோற்று இந்திய அணி அதிருப்தியும் ஏமாற்றமுமளித்தது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையையாவது இந்திய அணி ஜெயிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

எனவே வலுவான ஒருநாள் அணியை கட்டமைத்து ஒருநாள் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராக வேண்டியிருக்கிறது. தொடர்ந்து சொதப்பும் வீரர்களுக்கு தொடர் வாய்ப்பளிப்பதால், திறமையான மற்றவீரர்களுக்கு போதுமான வாய்ப்பளிக்கமுடியாமல் போகிறது.

Tap to resize

Latest Videos

நாங்களும் சளைச்சவங்க இல்லடா.. அபாரமாக பேட்டிங் ஆடி இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்த பாகிஸ்தான் ஓபனர்கள்

ஏற்கனவே ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பிவருகிறார். ஆனாலும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளித்துவிட்டு, சஞ்சு சாம்சனை புறக்கணிப்பது கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பைதொடர்களில் சொதப்பிய ரிஷப் பண்ட், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 2 போட்டிகளில் ஆடி 17 ரன் மட்டுமே அடித்தார். முதல் ஒருநாள் போட்டியில் 23 பந்தில் 15 ரன்கள் மட்டுமே அடித்தார். 

ஆனாலும் 38 பந்தில் 36 ரன்கள் அடித்த சஞ்சு சாம்சனை உட்காரவைத்துவிட்டு, 2வது ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தான் ஆடவைக்கப்பட்டார். ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்புவதால், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அவர் ஆட வாய்ப்பு பெறுவது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. 3வது போட்டியிலும் 10 ரன் மட்டுமே அடித்து சொதப்பினார். 

இப்படியாக ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பும் நிலையில், அவரை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துள்ளன.  அடுத்ததாக இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் ஆடுகிறது. அதில் சஞ்சு சாம்சனை ஆடவைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ரிஷப் பண்ட்டுக்கே வாய்ப்பளித்து, அதன்பின்னர் தான் அவரை நீக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சபா கரீம் கருத்து கூறியுள்ளார்.

Vijay Hazare Trophy: ஷெல்டான் ஜாக்சன் அபார சதம்.. ஃபைனலில் மகாராஷ்டிராவை வீழ்த்தி கோப்பையை வென்றது சௌராஷ்டிரா

இதுகுறித்து பேசிய சபா கரீம், வங்கதேசத்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் ரிஷப் பண்ட்டை ஆடவைக்கவேண்டும். 3 போட்டிகளிலும் அவர் வழக்கமாக ஆடும் 5வது பேட்டிங் ஆர்டரில் இறக்கவேண்டும். இந்த தொடரிலும் அவர் சரியாக ஆடாத பட்சத்தில் அதன்பின்னர் தான் அவரை நீக்கிவிட்டு அவரது இடத்தில் சஞ்சு சாம்சனையோ இஷான் கிஷனையோ எடுக்க வேண்டும் என்று சபா கரீம் கருத்து கூறியுள்ளார்.
 

click me!