Pro Kabaddi League: பரபரப்பான அரையிறுதியில் தமிழ் தலைவாஸை வீழ்த்தி ஃபைனலில் புனேரி பல்தான்

By karthikeyan VFirst Published Dec 15, 2022, 10:13 PM IST
Highlights

புரோ கபடி லீக் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறிய நிலையில், 2வது அரையிறுதி போட்டியில் தமிழ் தலைவாஸை வீழ்த்தி புனேரி பல்தான் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
 

புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின.

மற்ற 2 அரையிறுதி போட்டியாளர்களை தீர்மானிக்கும் முதல் பிளே ஆஃபில் டபாங் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணியும், அடுத்த பிளே ஆஃப் போட்டியில் யு.பி யோதாஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.  தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

Pro Kabaddi League: அரையிறுதியில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்

இன்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் பெங்களூரு புல்ஸை 49-29 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

2வது அரையிறுதி போட்டியில் தமிழ் தலைவாஸ் - புனேரி பல்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் சிறப்பாக ஆட, தொடக்கம் முதலே மாறி மாறி புள்ளிகளை பெற ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது. பரபரப்பான இந்த போட்டியில் கடைசியில் 39-37 என்ற கணக்கில் புனேரி பல்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.

எப்போ எப்படி ஆடணும்னு கோலிக்கு தெரியும்.. அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்..! ராகுல் டிராவிட் புகழாரம்

இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளை தழுவிய தமிழ் தலைவாஸ் அணி, அதன்பின்னர் அபாரமாக விளையாடி தொடர் வெற்றிகளை பெற்று பிளே ஆஃபிற்கு முன்னேறி, பிளே ஆஃபில் யு.பி யோதாஸை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், அரையிறுதியில் தமிழ் தலைவாஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணியின் கோப்பை கனவை தகர்த்து தொடரை விட்டு வெளியேற்றியது புனேரி பல்தான்.

இது வெறும் தொடக்கம் தான்டா தம்பி.. அறிமுக இன்னிங்ஸில் சதமடித்த அர்ஜுன் டெண்டுல்கருக்கு அக்கா சாரா வாழ்த்து

வரும் 17ம் தேதி நடக்கும் ஃபைனலில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸும் புனேரி பல்தானும் கோப்பைக்காக மோதுகின்றன. 

click me!