Pro Kabaddi League: பரபரப்பான போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி

Published : Oct 07, 2022, 10:23 PM IST
Pro Kabaddi League: பரபரப்பான போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி

சுருக்கம்

புரோ கபடி 9வது சீசனில் பரபரப்பான போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது.  

புரோ கபடி லீக் தொடரில் 8 சீசன்கள் வெற்றிகரமாக நடந்த நிலையில், 9வது சீசன் இன்று தொடங்கியது. 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இந்த சீசனில் பார்வையாளர்களுக்கு மத்தியில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

12 அணிகள் கலந்துகொண்டு ஆடும் புரோ கபடி போட்டிகள் பெங்களூரு, புனே, ஹைதராபாத் நகரங்களில் நடத்தப்படுகின்றன. முதல் 41 போட்டிகள் பெங்களூருவில் நடக்கிறது. பெங்களூரு காண்டிவீரா ஸ்டேடியத்தில் போட்டிகள் நடக்கின்றன.

இதையும் படிங்க - Pro Kabaddi League: முதல் போட்டியில் யு மும்பா அணியை வீழ்த்தி டபாங் டெல்லி அபார வெற்றி

இந்த சீசனின் முதல் போட்டியில் டபாங் டெல்லி மற்றும் யு மும்பா அணிகள் மோதின. அந்த போட்டியில் 41-27 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. 

அதைத்தொடர்ந்து பெங்களூரு புல்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. முதல் போட்டி ஒன்சைட் போட்டியாக அமைந்த நிலையில், இந்த போட்டி அப்படியில்லை. தொடக்கம் முதலே பரபரப்பாக இருந்தது. இரு அணிகளுமே சம பலத்துடன் கடுமையாக போட்டி போட்டு ஆடின. இரு அணிகளும் மாறி மாறி பாயிண்ட்ஸ் எடுக்க முதல் பாதி முடிவில் 17-17 என்ற புள்ளி கணக்கில் சமனில் இருந்தது.

இதையும் படிங்க - ப்ரோ கபடி லீக் 9வது சீசன்: 12 அணிகளின் முழு விவரம்

2ம் பாதி ஆட்டமும் பரபரப்பாக இருந்தது. 2ம் பாதியிலும் பெங்களூரு அணி 17 புள்ளிகளை பெற, 2ம் பாதியில் தெலுங்கு அணி 12 புள்ளிகள் மட்டுமே பெற்றது. இதையடுத்து 34-29 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!