
புரோ கபடி லீக் தொடரின் 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், 9வது சீசன் இன்று தொடங்கியது. இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் டபாங் டெல்லி மற்றும் யு மும்பா அணிகள் மோதின.
இதையும் படிங்க - ப்ரோ கபடி 9வது சீசன்: அனைத்து அணிகளின் ஓனர், கேப்டன், பயிற்சியாளர்..! முழு விவரம் இதோ
பெங்களூரு காண்டிவீரா ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் தொடக்கம் முதலே டெல்லி அணி அபாரமாக விளையாடி ஸ்கோர் செய்தது. டெல்லி அணியின் நட்சத்திர வீரரும் மிகச்சிறந்த ரைடருமான நவீன், சென்ற ரைடுகளில் எல்லாம் புள்ளிகளை குவித்தார்.
அதேபோல, யு மும்பா அணியின் ரைடர்களை டெல்லி வீரர்கள் மடக்கி பிடித்தனர். அதன்விளைவாக தொடக்கம் முதலே யு மும்பா அணி மீது டபாங் டெல்லி அணி ஆதிக்கம் செலுத்தி ஆடி பெரிய வித்தியாசத்தில் முன்னிலை வகித்துக்கொண்டே வந்தது.
இதையும் படிங்க - ப்ரோ கபடி லீக்: 8 சீசனில் கோப்பையை வென்ற அணிகளின் பட்டியல்! அதிகமுறை டைட்டில் வென்ற & டைட்டில் வெல்லாத அணிகள்
2ம் பாதியில் யு மும்பா அணியும் சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தது. ஆனாலும் டெல்லி அணி அபாரமாக ஆடி கடைசியில் 41-27 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்று இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.