31வது உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில், 26 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சீனாவின் செங்தூ நகரில் 31ஆவது கோடைக்கால உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கடந்த ஜூலை 28 ஆம் தேதி உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. சீனாவில் 3ஆவது முறையாக இந்த விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில், இந்திய தடகள வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு 26 பதக்கங்களுடன் திரும்பியுள்ளனர். இதில், 11 தங்கம், 5 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கம் அடங்கும்.
WI vs IND 3rd T20: இஷான் கிஷானை நீக்கிய இந்தியா: டி20 போட்டியில் அறிமுகமான யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
கடந்த 1959 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகப் பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் சிறப்பான போட்டி இதுவாக அமைந்துள்ளது. இந்த வெற்றிக்காக விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என்று அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணியில் 4ஆவது இந்திய வீரர்: உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்ற தன்வீர் சங்கா!
இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: “ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சி. நாட்டிற்கு பெருமை சேர்த்த மற்றும் வரவிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் எங்கள் அபாரமான விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சல்யூட்.
விசேஷமாக மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், 1959 ஆம் ஆண்டு முதல் உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மொத்தம் 18 பதக்கங்களை வென்றது. ஆனால், இந்த ஆண்டு 26 பதக்கங்கள் என்ற முன்மாதிரியான முடிவு உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது.
எங்கள் விளையாட்டு வீரர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இந்த பதக்கங்கள் ஒரு சான்றாகும். இந்த வெற்றிக்காக விளையாட்டு வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்களை நான் பாராட்டுகிறேன், மேலும் அவர்களின் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
A sporting performance that will make every Indian proud!
At the 31st World University Games, Indian athletes return with a record-breaking haul of 26 medals! Our best performance ever, it includes 11 Golds, 5 Silvers, and 10 Bronzes.
A salute to our incredible athletes who… pic.twitter.com/bBO1H1Jhzw