இந்தியாவிற்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டி தற்போது கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் இஷான் கிஷான் நீக்கப்பட்டுள்ளார். ரவி பிஷ்னாய் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா அணியில் 4ஆவது இந்திய வீரர்: உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்ற தன்வீர் சங்கா!
இந்தியா:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால், முகேஷ் குமார்.
வெஸ்ட் இண்டீஸ்:
பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல் (கேப்டன்), ஷிம்ரன் ஹெட்மயர், ரோமரியா ஷெப்பர்டு, ரோஸ்டன் சேஸ், அகீல் ஹூசைன், அல்சாரி ஜோசஃப், ஒபேட் மெக்காய்
அதே போன்று கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த குல்தீப் யாதவ் மீண்டும் திரும்ப வந்துள்ளார். சஞ்சு சாம்சன் மற்றும் சுப்மன் கில்லிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இஷான் கிஷானுக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தப் போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார்.
புதிய பிளான் போட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி நியமனம்!
டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பல சாதனைகளை படைத்தார். முதல் டெஸ்ட் போட்டியில் 171 ரன்கள் எடுத்தார். 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 57 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 38 ரன்களும் எடுத்தார். ஒரு நாள் போட்டிகளில் அவர் இடம் பெறவில்லை. தற்போது இன்று நடக்கும் 3ஆவது டி20 போட்டியில் அவர் களமிறங்கியுள்ளார்.
இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டருக்குப் பதிலாக ரோஸ்டன் சேஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றால் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தொடரை கைப்பற்றி புதிய சாதனை படைக்கும். இதுவே இந்தியா வெற்றி பெற்றால் முதல் வெற்றியை பதிவு செய்யும்.
WI vs IND 3rd T20: பதிலடி கொடுக்குமா இந்தியா? ஒரு தொடரை கூட கைப்பற்றாத வெ.இ, வரலாற்றை மாற்றுமா?