அர்ஷத் நதீமுக்குப் பரிசு மழை! - PUNJAB PAK 92.97 என்ற நம்பர் பிளேட்டில் ஹோண்டா சிவிக் கார் பரிசு!

Published : Aug 14, 2024, 06:21 AM IST
அர்ஷத் நதீமுக்குப் பரிசு மழை! - PUNJAB PAK 92.97 என்ற நம்பர் பிளேட்டில் ஹோண்டா சிவிக் கார் பரிசு!

சுருக்கம்

பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு பஞ்சாப் முதல்வர் 92.97 என்ற எண்ணைக் கொண்ட கார் உள்ளிட்ட பல பரிசுகளை வழங்கியுள்ளார். பல நிறுவனங்களும் அவருக்கு கார், எருமை, வாழ்நாள் முழுவதும் இலவச பெட்ரோல் போன்ற பரிசுகளை அறிவித்துள்ளன.

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் 92.97மீ எறிந்து வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அர்ஷத் நதீமுக்கு பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் PUNJAB PAK 92.97 என்ற நம்பர் பிளேட் கொண்ட ஹோண்டா சிவிக் காரை பரிசாக அளித்துள்ளார். பாரிஸீல் நடைபெற்ற 33ஆவது ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கம் வென்று சாதனை படைத்தார். கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பங்கேற்ற அவர் 92.97மீ தூரம் எறிந்து சாதனை படைத்தார்.

 

 

இந்த தொடரில் அதிகபட்சமாக 92.97மீ தூரம் எறிந்த வீரர் என்ற சாதனையை படைத்ததோடு 90மீக்கும் அதிகமான தூரம் எறிந்தவர்களின் பட்டியலிலும் இடம் பிடித்தார். தங்கப் பதக்கம் கைப்பற்றிய அர்ஷத் நதீமிற்கு பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் 100 மில்லியன் (10 கோடி) பரிசுத் தொகைக்கான காசோலையை வழங்கியதோடு அவர் எறிந்த 92.97மீ தூரத்தை காரின் நம்பர் பிளேட்டாக பதிவு செய்து அந்த PUNJAB PAK 92.97 என்ற நம்பர் பிளேட் கொண்ட ஹோண்டா சிவிக் காரை பரிசாக அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோவில் காருக்கான சாவியை நதீமிடம் கொடுத்துள்ளார்.

 

 

இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக பல நிறுவனங்கள் அர்ஷத் நதீமுக்கு கார்களை பரிசாக அறிவித்துள்ளனர். அவற்றின் பட்டியலை இங்கு காணலாம்…

வினேஷ் போகத் வழக்கில் தீர்ப்பு ஆக. 16 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: வினேஷ் போகத்திற்கு நியாயம் கிடைப்பதில் தாமதம்!

சுஸூகி ஆல்டோ கார்: பரிசு நம்பர் 1:

தங்கப் பதக்கத்துடன் நாடு திரும்பிய அர்ஷத் நதீமிற்கு நாடு முழுவதும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு, அரசு மற்றும் முன்னணி நிறுவனங்கள் பரிசுகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், பாகிஸ்தானிய அமெரிக்க தொழிலதிபர் அலி ஷேகானி அர்ஷத் நதீமிற்கு புத்தம் புதிய சுஸூகி ஆல்டோ காரை பரிசாக அறிவித்துள்ளார்.

பரிசு நம்பர் 2: எருமை மாடு

அர்ஷத் நதீமின் மாமனார் எருமை மாடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்து நதீமின் மாமனார் முகமது நவாஸ் கூறியிருப்பதாவது: எங்களது கிராமத்தில் எருமை மாட்டை பரிசாக அளிப்பது எனது, ஒருவருக்கு செல்வம், மற்றும் மகிழ்ச்சி என்றைக்கும் நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதனால், தான் நான் எருமை மாட்டை பரிசாக அளித்தேன் என்று கூறியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் 2024: சாதனைகளும் சர்ச்சைகளும்; பாராலிம்பிக்ஸில் திருநங்கைகள் பங்கேற்பு?

பரிசு நம்பர் 3: கார் மற்றும் பெட்ரோல் அல்லது டீசல்

GO பெட்ரோல் பம்பின் COO ஜீஷன் தய்யாப் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு புத்தம் புதிய கார் ஒன்றை பரிசாக அறிவித்ததோடு வாழ்நாள் முழுவதும் இலவச எரிபொருளை அறிவித்துள்ளார்.

பரிசு நம்பர் 4: சுஸூகி ஆல்டோ கார்

ஜேடிசி அறக்கட்டளையின் நிறுவனர் ஜாபர் அப்பாஸ் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு புதிதாக சுஸுகி ஆல்டோ காரை பரிசாக அறிவித்துள்ளார்.

பரிசு நம்பர் 5: வரி இல்லை

அர்ஷத் நதீமின் ஒலிம்பிக் பரிசுத் தொகைக்கு வரி இல்லை என்று FBR உறுதிப்படுத்தியுள்ளது. தங்கப் பதக்கம் வென்றவருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகைக்கு வரி விதிக்கப்படாது.

ஓய்வுபெற்ற வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் பிரீமியர் லீக் - சச்சின், டிராவிட், சேவாக் பங்கேற்க வாய்ப்பு!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?
IND vs SA: வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி, பாபர் அசாம் சாதனை சமன் செய்யப்படுமா?