Paris 2024, Novak Djokovic: ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தங்கப் பதக்கம் கைப்பற்றி சாதனை படைத்த ஜோகோவிச்!

By Rsiva kumarFirst Published Aug 4, 2024, 9:53 PM IST
Highlights

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்று ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தங்கப் பதக்கம் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 9ஆவது நாளான இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் ஸ்பெயின் நாட்டைச் கார்லோஸ் அல்காரஸை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் 7-6(3), 7-6(2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.

இந்திய அணிக்கு ஆப்பு வச்ச சுழல் சக்கரவர்த்தி வாண்டர்சே – ஒரே வீரர் 6 விக்கெட் எடுத்து சாதனை!

Latest Videos

அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதுமட்டுமின்றி 37 வயதான வீரராக தங்கப் பதக்கம் வென்ற வீரர் என்ற பெருமையையும் ஜோகோவிச் பெற்றுள்ளார். இதுவரையில் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் தனது டென்னிஸ் வரலாற்றில் தற்போது ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தையும் சேர்த்துள்ளார். இதன் மூலமாக கோல்டன் ஸ்லாம் வென்ற 5ஆவது வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் ஜோகோவிச் வெண்கலப் பதக்கம் மட்டுமே கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியில் லவ்லினாவும் தோல்வி – குத்துண்டையில் போட்டியிட்ட அனைவரும் தோல்வி, ஒரு பதக்கம் கூட இல்ல!

இந்த வெற்றியின் மூலமாக ஆண்ட்ரே அகாசி, ஸ்டெஃபி கிராஃப், ரஃபேல் நடால், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் உடன் இணைந்து 5ஆவது வீரராக 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளையும், ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கதையும் வென்ற வீரராக சாதனை படைத்தார். நோவக் ஜோகோவிச் டென்னிஸ் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை அவர் படைத்துள்ளார். 10 ஆஸ்திரேலியா ஓபன், 2 பிரெஞ்சு ஓபன், 7 விம்பிள்டன், 4 யுஎஸ் ஓபன் என்று 4 முக்கியமான தொடர்களில் மொத்தமாக 25 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதுமட்டுமின்றி 7 ஏடிபி ஃபைனல்ஸ், 2 கேரியர் கோல்டன் மாஸ்டர்கள், ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ளார்.

அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் காம்போவில் இலங்கை 240 ரன்கள் குவிப்பு – தமிழக வீரர் வாஷிக்கு 3 விக்கெட்!

கிட்டத்தட்ட 428 வாரங்கள் நம்பர் 1 வீரராகவே சாதனை படைத்துள்ளார். மேலும், 8 முறை ஆண்டு இறுதியில் முதலிடத்தில் இருந்துள்ளார். இவரது சாதனைகளின் பட்டியலில் டேவிஸ் கோப்பை, 9 மாஸ்டர்ஸ் 1000 போட்டிகளிலும் அடங்கும்.

click me!