
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற 9ஆவது நாளில் குத்துச்சண்டை போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோகைன் சீனாவின் லி குயானை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே திணறி வந்த லவ்லினா முதல் சுற்றை 2க்கு 3 என்று இழந்தார். இதே போன்று 2ஆவது சுற்றிலும் 2க்கு 3 என்று லவ்லினா இழந்தார்.
கடைசியில் 1-4 என்று தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். இதன் மூலமாக குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிட்ட ஆண்களுக்கான பிரிவில் அமித் பங்கல், நிஷாந்த் தேவ் இருவரும் வெளியேறினர்.
இதே போன்று நிகாத் ஜரீன், ப்ரீதி பவர், ஜைஸ்மின் லம்போரியா மற்றும் லவ்லினா போர்கோகைன் ஆகியோர் மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறினர். இதன் மூலமாக ஒட்டு மொத்தமாக குத்துச்சண்டை போட்டியில் இந்தியா பதக்கம் இல்லாமல் வெளியேறி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.