
ஒவ்வொரு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பர்னில் நடந்துவருகிறது. ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் செர்பியா வீரரும் சமகாலத்தின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவருமான நோவாக் ஜோகோவிச் மற்றும் க்ரீஸ் வீரர் சிட்சிபாஸ் ஆகிய இருவரும் மோதினர்.
தொடக்கம் முதலே மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சிட்சிபாஸ் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடினார் ஜோகோவிச். 6-3, 7-6 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி ஜோகோவிச் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
ஒருநாள் உலக கோப்பையை ஜெயிக்கணும்னா இதை செய்யுங்க..! ரோஹித், டிராவிட்டுக்கு தாதா தரமான அறிவுரை
இது ஜோகோவிச்சின் 22வது கிராண்ட்ஸ்லாம் டைட்டில் ஆகும். இதன்மூலம், அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ரஃபேல் நடாலின் சாதனையை சமன் செய்தார் ஜோகோவிச்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.