IND vs NZ: 2வது டி20 டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்

Published : Jan 29, 2023, 06:49 PM IST
IND vs NZ: 2வது டி20 டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்

சுருக்கம்

இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டி20 போட்டி லக்னோவில் இன்று நடக்கிறது.

இந்த போட்டியிலும் ஜெயித்து டி20 தொடரை வெல்லும் முனைப்பில் நியூசிலாந்து அணியும், இந்த போட்டியில் ஜெயித்து தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்கியுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஒருநாள் உலக கோப்பையை ஜெயிக்கணும்னா இதை செய்யுங்க..! ரோஹித், டிராவிட்டுக்கு தாதா தரமான அறிவுரை

இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

ஷுப்மன் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஷிவம் மாவி, அர்ஷ்தீப் சிங்.

IND vs NZ: ஃபினிஷிங் ரோலுக்கு தீபக் ஹூடா சரியா வரமாட்டார்.. அந்த பையனை இறக்குங்க..! தினேஷ் கார்த்திக் கருத்து

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), மார்க் சாப்மேன், க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), இஷ் சோதி, ஜேக்கப் டஃபி, லாக்கி ஃபெர்குசன், பிளைர் டிக்னெர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Galle Test: 462 ரன்கள் குவித்த இந்தியா... சரசரவென சரிந்த இலங்கை டாப் ஆர்டர்..!
Yashasvi Jaiswal: வைபவ் வந்ததும் ஜெய்ஸ்வாலை கழட்டிவிடும் RR..? MI உடன் மெகா டிரேட் டீல்..?