SA vs ENG: பட்லர், ப்ரூக் அபார பேட்டிங்.. மொயின் அலி அரைசதம்! 2வது ODIயில் தென்னாப்பிரிக்காவுக்கு கடின இலக்கு

By karthikeyan VFirst Published Jan 29, 2023, 6:05 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 342 ரன்களை குவித்து, 343 ரன்கள் என்ற கடினமான இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது.
 

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

தென்னாப்பிரிக்க அணி:

டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ராசி வாண்டர்டசன், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், வைன் பார்னெல், மார்கோ யான்சென், கேஷவ் மஹராஜ், அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி.

ஒருநாள் உலக கோப்பையை ஜெயிக்கணும்னா இதை செய்யுங்க..! ரோஹித், டிராவிட்டுக்கு தாதா தரமான அறிவுரை

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், டேவிட் மலான், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், அடில் ரஷீத், ஆலி ஸ்டோன், ரீஸ் டாப்ளி.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் டாப் 3 வீரர்களான ஜேசன் ராய்(9), டேவிட் மலான் (12), பென் டக்கெட் (20) ஆகிய மூவரும் சொதப்ப, அதன்பின்னர் களமிறங்கிய ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர், மொயின் அலி ஆகிய மூவரும் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர்.

மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய ஹாரி ப்ரூக் 75 பந்தில் 80 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மொயின் அலி 51 ரன்கள் அடித்தார். நிலைத்து நின்று அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த ஜோஸ் பட்லர், 94 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று இன்னிங்ஸை சிறப்பாக முடித்து கொடுத்தார். கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தும் கூட, அவரால் சதமடிக்க முடியவில்லை. சாம் கரன் 17 பந்தில் 3 சிக்ஸர்களை விளாசி 28 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 342 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி.

IND vs NZ: ஃபினிஷிங் ரோலுக்கு தீபக் ஹூடா சரியா வரமாட்டார்.. அந்த பையனை இறக்குங்க..! தினேஷ் கார்த்திக் கருத்து

தென்னாப்பிரிக்க அணி 343 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டுகிறது.

click me!