BBL: நாக் அவுட் மேட்ச்சில் மெல்பர்ன் ரெனெகேட்ஸை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jan 29, 2023, 5:23 PM IST
Highlights

பிக்பேஷ் லீக் தொடரின் நாக் அவுட் போட்டியில் மெல்பர்ன் ரெனெகேட்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் அணி அபார வெற்றி பெற்றது. மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி தொடரை விட்டு வெளியேறிய நிலையில், பிரிஸ்பேன் ஹீட் அணி சேலஞ்சர் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸை எதிர்கொள்கிறது.
 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி முதல் அணியாக ஃபைனலுக்கு முன்னேறியது. குவாலிஃபயர் போட்டியில் பெர்த் அணியிடம் தோற்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு 2வது வாய்ப்பு உள்ளது. அந்த அணி சேலஞ்சர் போட்டியில் ஆடும்.

சேலஞ்சர் போட்டியில் சிட்னி சிக்ஸருடன் மோதும் அணியை தீர்மானிக்கும் நாக் அவுட் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணிகள் மோதின. மெல்பர்னில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஒருநாள் உலக கோப்பையை ஜெயிக்கணும்னா இதை செய்யுங்க..! ரோஹித், டிராவிட்டுக்கு தாதா தரமான அறிவுரை

முதலில் பேட்டிங் ஆடிய மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷான் மார்ஷ் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். ஒருமுனையில் கப்டில்(1), சாம் ஹார்ப்பெர் (22), ஆரோன் ஃபின்ச்(10), கிரிட்ச்லி (23) ஆகியோர் ஒருமுனையில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடி அரைசதம் அடித்த ஷான் மார்ஷ், 53 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 82 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுக்க, 20 ஓவரில் 162 ரன்கள் அடித்தது மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி.

IND vs NZ: ஃபினிஷிங் ரோலுக்கு தீபக் ஹூடா சரியா வரமாட்டார்.. அந்த பையனை இறக்குங்க..! தினேஷ் கார்த்திக் கருத்து

163 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா - ஜோஷ் பிரௌன் இணைந்து அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 8.5 ஓவரில் 75 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஜோஷ் பிரௌன் 39 ரன்களும், அரைசதம் அடித்த உஸ்மான் கவாஜா 59 ரன்களும் அடித்தனர். லபுஷேன் 23 ரன்கள் அடித்தார். மேட் ரென்ஷா  13 பந்தில் 27 ரன்கள் விளாசி போட்டியை முடித்து கொடுத்தார். 19வது ஓவரில் இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரிஸ்பேன் ஹீட் அணி, சேலஞ்சர் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸை எதிர்கொள்கிறது. அதில் ஜெயிக்கும் அணி ஃபைனலில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸை எதிர்கொள்ளும்.
 

click me!