IND vs NZ: ஃபினிஷிங் ரோலுக்கு தீபக் ஹூடா சரியா வரமாட்டார்.. அந்த பையனை இறக்குங்க..! தினேஷ் கார்த்திக் கருத்து

By karthikeyan V  |  First Published Jan 29, 2023, 3:03 PM IST

டி20 கிரிக்கெட்டில் ஃபினிஷிங் ரோலுக்கு தீபக் ஹூடா சரிப்பட்டு வரமாட்டார்; அவரை 3ம் வரிசையில் இறக்கிவிட்டு ஃபினிஷராக ஜித்தேஷ் ஷர்மாவை 6ம் வரிசையில் ஆடவைக்கலாம் என்று தினேஷ் கார்த்திக் கருத்து கூறியுள்ளார்.
 


2022 டி20 உலக கோப்பைக்கு பின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய 2 சீனியர் வீரர்களும் டி20 கிரிக்கெட்டில் ஆடுவதில்லை. எனவே டி20 போட்டிகளில் இந்திய அணி ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது.

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களை வென்ற இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆடிவருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.

Tap to resize

Latest Videos

வெறும் இரண்டே ஆண்டில் தோனி, ரெய்னாவின் சாதனையை முறியடித்தார் சூர்யகுமார் யாதவ்

முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும் வாய்ப்பிருந்தும் கூட அதை செய்ய முடியாமல் அந்த அரிய வாய்ப்பை தவறவிட்டார் தீபக் ஹூடா. 10 பந்தில் 10 ரன் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். இதுவரை 19 டி20 போட்டிகளில் ஆடி ஒரு சதத்துடன் 366 ரன்கள் அடித்துள்ளார். அந்த சதமடித்த இன்னிங்ஸை தவிர தீபக் ஹூடா பெரிதாக ஆடியதில்லை. 3 அல்லது 4ம் வரிசைகளில் ஆடத்தகுந்த வீரரான தீபக் ஹூடாவால் 6ம் வரிசையில் சரியாக ஆட முடியவில்லை. எனவே அவரை 3ம் வரிசையில் இறக்கிவிட்டு, ஜித்தேஷ் ஷர்மாவை 6ம் வரிசையில் இறக்கவேண்டும் என்று தினேஷ் கார்த்திக் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், 5, 6, 7ம் வரிசைகளில், குறிப்பாக 6 மற்றும் 7ம் வரிசைகளில் தொடர்ச்சியாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகக்கடினம். அதனால் தான் தீபக் ஹூடா 6ம் வரிசையில் ஆட கஷ்டப்படுகிறார். அவர் 3ம் வரிசையில் நன்றாக ஆடியிருக்கிறார். சில காரணங்களுக்காக அவர் 6-7ம் வரிசையில் இறக்கப்படுகிறார். ஆனால் அது அவருக்கு கடும் சவாலாக இருக்கிறார். ஐபிஎல்லிலும் அந்த வரிசையில் அவர் சோபித்ததில்லை. 

ஹர்திக் பாண்டியா ஸ்மார்ட்டான கேப்டன் இல்ல.. குறிப்பாக அந்த விஷயத்தில் கோட்டைவிட்டார்..! கனேரியா விமர்சனம்

அவர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகத்தான் அவரை நினைத்துக்கொள்கிறார். பவர்ப்ளேயில் ஆட விரும்பும் வீரர் ஹூடா. அதேவேளையில், ஜித்தேஷ் ஷர்மா 6ம் வரிசைக்கு சரியான வீரராக இருப்பார். அவர் ஒரு ஃபினிஷர். எனவே அவரை 6ம் வரிசையில் இறக்கலாம். தீபக் ஹூடாவிற்கு 3ம் வரிசையில் வாய்ப்பளிக்கலாம். தீபக் ஹூடாவை அணியிலிருந்து நீக்காமல் அவரை 3ம் வரிசையில் ஆடவைத்து பார்க்கவேண்டும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
 

click me!