மகளிர் அண்டர் 19 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து பலப்பரீட்சை!

Published : Jan 29, 2023, 11:35 AM IST
மகளிர் அண்டர் 19 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து பலப்பரீட்சை!

சுருக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மகளிர் அண்டர் 19 டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று நடக்கிறது.  

தென் ஆப்பிரிக்காவில் மகளிர் அண்டர் 19 டி20 உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறது. கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் இன்றுடன் முடிவடைகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடிய இந்த தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் முன்னேறின.

SA vs ENG: 2வது ODIயில் ஜெயித்தே தீரணும்.. இங்கி., அணியில் ஒரு அதிரடி மாற்றம்! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

நேற்று முன்தினம் 2 அரையிறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், முதலில் நடந்த அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடி வெறும் 99 ரன்கள் மட்டுமே அடித்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனை கிரேஸ் 20 ரன்களும், பின்வரிசையில் அலெக்ஸா ஸ்டோன்ஹௌஸ் 25 ரன்களும் அடித்தனர். 9ம் வரிசையில் இறங்கிய ஜோஸி க்ரௌவ்ஸ் 15 ரன்கள் அடித்து பங்களிப்பு செய்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 20 ஓவரில் 99 ரன்கள் மட்டுமே அடித்தது.

புதிய புதிய ஷாட்டுகளை அடிக்கிறாரே! சூர்யகுமார் யாதவ்விற்கு ரிக்கி பாண்டிங் பாராட்டு!

100 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அந்த அணி 18.4 ஓவரில் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மகளிர் அண்டர் 19 டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று நடக்கிறது.

இந்தியா தோல்விக்கு அர்ஷ்தீப் சிங் காரணமா? மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளான நோ பால் மன்னன்!

மகளிர் அண்டர் 19 டி20 உலக கோப்பை கிரிக்கெட் இன்று நடக்க உள்ள நிலையில், இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தும் இந்திய வீராங்கனைகளுடன் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கலந்துரையாடினார். அவர் மட்டுமின்றி பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷாவும், இந்திய வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: இந்தியா பேட்டிங்..! சஞ்சு சாம்சன், நம்பர் 1 ஸ்பின்னர் நீக்கம்! பிளேயிங் லெவன்!
ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி