SA vs ENG: 2வது ODIயில் ஜெயித்தே தீரணும்.. இங்கி., அணியில் ஒரு அதிரடி மாற்றம்! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Jan 28, 2023, 10:56 PM IST
Highlights

தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவரில் 298 ரன்களை குவித்தது. 299 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் சதமடித்தும் கூட (91 பந்தில் 113 ரன்கள்) அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பியதால் 271 ரன்கள் மட்டுமே அடித்து 27 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது.

இவர் டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டார்..! இரட்டை சத நாயகனை விளாசிய முன்னாள் வீரர்

2வது ஒருநாள் போட்டி ஜனவரி 29ம் தேதி நடக்கிறது. இந்த போட்டியிலும் ஜெயித்து ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணியும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க 2வது போட்டியில் ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வெற்றி முனைப்பில் இங்கிலாந்து அணியும் களமிறங்குகின்றன. எனவே போட்டி கடுமையாக இருக்கும்.

தென்னாப்பிரிக்க அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. ஆனால் இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றம்  செய்யப்படலாம். ஃபாஸ்ட் பவுலர் ஆலி ஸ்டோனுக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் - ரீஸ் டாப்ளி ஆகிய இருவரில் ஒருவர் இறங்குவார். 

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், டேவிட் மலான், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மொயின் அலி, சாம் கரன், டேவிட் வில்லி, அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ்வோக்ஸ்/ரீஸ் டாப்ளி.

IND vs NZ: அவரு அணியில் தேவையே இல்ல.. அந்த பையனையாவது ஆடவைக்கலாம்..! 2வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி

உத்தேச தென்னாப்பிரிக்க அணி:

டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ராசி வாண்டர்டசன், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், வைன் பார்னெல், சிசாண்டா மகாளா, ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, டப்ரைஸ் ஷம்ஸி.
 

click me!