கொட்டி தீர்த்த மழை: இந்தியா, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் ரத்து!

By Rsiva kumarFirst Published Jan 29, 2023, 9:47 AM IST
Highlights

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் மகளிருக்கான முத்தரப்பு டி20 தொடர் நடந்து வருகிறது. இதில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மகளிர் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய மகளிருக்கான முத்தரப்பு டி20 தொடர் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி முடிகிறது.

சவுதி அரேபியா வாழ்க்கை குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ என்ன சொன்னார்? பியர்ஸ் மோர்கன் விளக்கம்!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5ஆவது போட்டி நேற்று லண்டனில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் களமிறங்கினர். 2 ஓவர்களில் 4 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், பலத்த மழை பெய்தது. நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கப்பட்ட போட்டியின் போது தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்த நிலையில், இரவு 9.25 மணிக்கு போட்டி கைவிடப்பட்டதாக போட்டி நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

எனது தோழியை மணந்தது மாயாஜாலமான நாள்: அக்‌ஷர் படேல் டுவீட்!

மேலும், இரு அணிகளுக்கும் தலா புள்ளி அளிக்கப்பட்டது. இதுவரையில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய மகளிர் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. எனினும், 10 புள்ளிகள் பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதே போன்று 4 போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வியடைந்த நிலையில், ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை.

புதிய புதிய ஷாட்டுகளை அடிக்கிறாரே! சூர்யகுமார் யாதவ்விற்கு ரிக்கி பாண்டிங் பாராட்டு!

தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணியும் 10 புள்ளிகள் பெற்று, புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. ஏனென்றால், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டிகள் கூட வெற்றி பெறவில்லை.

இந்தியா தோல்விக்கு அர்ஷ்தீப் சிங் காரணமா? மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளான நோ பால் மன்னன்!

இதையடுத்து, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையிலான 6ஆவது போட்டி நாளை கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள பப்பலோ பார்க்கில் நடக்கிறது. இதையடுத்து, வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான 7ஆவது போட்டி அதாவது இறுதிப் போட்டி கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள பப்பலோ பார்க்கில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!