neeraj chopra: diamong league: வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா ! டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் சாம்பியன் பட்டம்

By Pothy RajFirst Published Aug 27, 2022, 8:56 AM IST
Highlights

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா புதிய வரலாறு படைத்துள்ளார். ஸ்விட்சர்லாந்தின் லாசானே லெக்கில் நடந்து வரும் டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும், வரலாறும் படைத்தார்

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா புதிய வரலாறு படைத்துள்ளார். ஸ்விட்சர்லாந்தின் லாசானே லெக்கில் நடந்து வரும் டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும், வரலாறும் படைத்தார்

உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக நீரஜ் சோப்ரா காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆனால் அதற்கு ஜூலை மாதத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 89.08 மீட்டர் ஈட்டி எறிந்தாலும் வெள்ளிப் பதக்கத்தோடு விடை பெற்றார்

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் ரத்து..! ஃபிஃபா அதிரடி முடிவு?

இந்நிலையில் தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக காமென்வெல்த் போட்டியில் பங்கேற்காமல் ஓய்வு இருந்த நீரஜ் சோப்ரா டைமண்ட்லீக்கில் பங்கேற்றார். இதில் 89.08 மீட்டர் தொலைவுக்கு நீரஜ் சோப்ரா எறிந்து சாதனை படைத்தார், அவரின் 2-வதுவாய்ப்பில் 85.18 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்தார். 

டைமண்ட் லீக் போட்டியில் இதுவரை எந்த இந்தியரும் சாம்பியன் பட்டம் வென்றதில்லை. முதல் முறையாக நீரஜ் சோப்ரா ஈட்டிஎறிதலில் மகுடம் சூடி வரலாறு படைத்தார். 

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவன்.! ஆசை காட்டி மோசம் செய்யப்பட்ட சீனியர் வீரர்

 

NEERAJ IS BACK WITH A BANG!! 💥 becomes 1st Indian to win a Meet & claim the top spot at with the best throw of 89.08m

That's our Star Neeraj for you!!
Well done 👏

📸
1/1 pic.twitter.com/C7PTWs1EIg

— SAI Media (@Media_SAI)

நீரஜ் சோப்ராவுக்கு முன்பாக வட்டு எறிதல் வீரர் விகாஸ் கவுடா 3-வது இடத்தைப் பிடித்தார். 2012ம் நியூயார்க்கில் நடந்த போட்டியிலும், 2014ம் ஆண்டு தோஹாவில் நடந்த போட்டியிலும் விகாஸ் கவுடா 2வது இடத்தையும், ஷாங்கா மற்றும் எஜூனேவில் 2015ம் ஆண்டு நடந்த போட்டியில் விகாஸ் கவுடா 3வது இடத்தைப் பிடித்தார். 

இந்தப் போட்டியில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 2023ம் ஆண்டு புடாபெஸ்ட் நகரில் நடக்கும் உலகசாம்பியன்ஷிப் போட்டியில் நேரடியாகப் பங்கேற்கும் வாய்பபும் கிடைத்துள்ளது.

காயத்தால் விலகிய முகமது வாசிமுக்கு மாற்று வீரராக களமிறக்கப்படும் ஹசன் அலி

டைமண்ட் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்றது குறித்து நீரஜ் சோப்ரா கூறுகையில் “ என்னுடைய திறமை,வெற்றியை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. 89 மீட்டர் தொலைவுக்கு வீசியிருக்கிறேன். காயத்திலிருந்து மீண்டு வெற்றிகரமாக வந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
 

click me!