Asia Cup: காயத்தால் விலகிய முகமது வாசிமுக்கு மாற்று வீரராக களமிறக்கப்படும் ஹசன் அலி

By karthikeyan VFirst Published Aug 26, 2022, 10:29 PM IST
Highlights

ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து காயத்தால் விலகிய முகமது வாசிமுக்கு பதிலாக ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். 
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 (நாளை) முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் 28ம் தேதி துபாயில் நடக்கிறது. 

இந்நிலையில், ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி காயம் காரணமாக ஆடவில்லை. அவருக்கு மாற்று வீரராக முகமது ஹஸ்னைன் அறிவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க - Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவன்.! ஆசை காட்டி மோசம் செய்யப்பட்ட சீனியர் வீரர்

ஷாஹீன் அஃப்ரிடியை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் மற்றொரு ஃபாஸ்ட் பவுலரான முகமது வாசிமும் காயம் காரணமாக ஆசிய கோப்பையிலிருந்து விலகினார். ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியுடன் துபாய் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த முகமது வாசிமுக்கு முதுகில் காயம் ஏற்பட்டு தொடரிலிருந்து விலகினார்.

இந்நிலையில், முகமது வாசிமுக்கு மாற்று வீரராக அனுபவம் வாய்ந்த சீனியர் ஃபாஸ்ட் பவுலரான ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். ஹசன் அலி பேட்டிங்கும் ஆடத்தெரிந்தவர் ஆவார்.

ஹசன் அலி பாகிஸ்தான் அணிக்காக 21 டெஸ்ட், 60 ஒருநாள் மற்றும் 49 டி20 போட்டிகளில் ஆடியிருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் 60 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். பாகிஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டில் அனுபவம் வாய்ந்த ஹசன் அலி இணைந்திருப்பது பாகிஸ்தான் அணிக்கு பலம் சேர்க்கும்.

இதையும் படிங்க - ஆசிய கோப்பை: பாகிஸ்தான் அணியின் பெரிய குறை இதுதான்..! அதைக்கூட கண்டுபிடிக்காமல் ஆட வந்துட்டாங்க

ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிஃப் அலி, ஃபகர் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ராஃப், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், ஹசன் அலி, நசீம் ஷா, முகமது ஹஸ்னைன், ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதிர்.

click me!