ஆசிய கோப்பை: கோலிக்கு கட்டம் கட்டிய ரோஹித்.. வேதனையின் வெளிப்பாடா கோலியின் டுவீட்..?

By karthikeyan VFirst Published Aug 26, 2022, 9:04 PM IST
Highlights

ஆசிய கோப்பை தொடர் நெருங்கிவரும் நிலையில், விராட் கோலியின் டுவீட் சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளதால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் 28ம் தேதி துபாயில் நடக்கிறது.

பாகிஸ்தானிடம் கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை உலக கோப்பையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த படுதோல்விக்கு இந்த ஆசிய கோப்பையில் பதிலடி கொடுப்பதுடன், ஆசிய கோப்பையையும் வெல்லும் முனைப்பில் உள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

இதையும் படிங்க - ரோஹித் - டிராவிட்டின் ஸ்மார்ட்டான மூவ் இதுதான்! உலகின் தலைசிறந்த பவுலருக்கு கம்பேக் வாய்ப்பு- சக்லைன் முஷ்டாக்

தீபக் ஹூடா நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில், விராட் கோலி கடந்த 3 ஆண்டுகளாகவே சரியான ஃபார்மில் இல்லை.  விராட் கோலி மீது ஒவ்வொரு தொடரின்போதும் எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், அவர் தொடர்ந்து ஏமாற்றமளித்துக்கொண்டே இருக்கிறார். எனவே விராட் கோலி என்ற பிராண்டிற்காக அவரை ஆடவைப்பதைவிட, ஃபார்மில் இருக்கும் வீரரை ஆடவைப்பதே அணிக்கு நல்லது என்று பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்திவந்தனர். 

அதையே அணி நிர்வாகமும் யோசிப்பதாக தெரிகிறது. விராட் கோலி இன்று பதிவிட்ட டுவீட், அவருக்கு அணியில் அழுத்தம் அதிகரிப்பதை உணர்த்துவதாகவே இருந்தது. தோனியின் கீழ் தான் ஆடிய காலக்கட்டம் தான் தனது கெரியரில் மகிழ்ச்சியான தருணம் என்றும், அவருடனான பார்ட்னர்ஷிப் தனக்கு மிகவும் ஸ்பெஷல் என்றும் கோலி டுவீட் செய்திருந்தார். 

இப்போதைய இந்திய அணியில் தனக்கு மரியாதை இல்லை/முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதன் விளைவாகத்தான் கோலி இந்த டுவீட்டை பதிவிட்டிருப்பதாக தெரிகிறது. 

இதையும் படிங்க - ஷாஹீன் அஃப்ரிடி இல்லைனா என்ன? இவங்க 3 பேரும் சேர்ந்து இந்திய வீரர்களை மிரட்டி விட்ருவாங்க - சக்லைன் முஷ்டாக்

கோலியின் டுவீட்டை கண்ட அவரது ரசிகர்கள், கேப்டன் ரோஹித் சர்மா அவரை ஓரங்கட்டுவதாக குற்றம்சாட்டுகின்றனர். ரோஹித்தின் ரசிகர்களோ, ஃபார்மில் இல்லாதவரை அணியின் நலன் கருதி உட்காரவைத்தால் கூட, அதில் என்ன தவறு என்றும் கோலி நன்றாக ஆட முயற்சிக்க வேண்டுமே தவிர ரோஹித்தை குறைகூறக்கூடாது என்றும் கருத்து கூறிவருகின்றனர்.

ஆகமொத்தத்தில், ஆசிய கோப்பைக்கு முன், தனது டுவீட்டின் மூலம் பூகம்பத்தை கிளப்பியுள்ளார் விராட் கோலி. 
 

click me!