ஆசிய கோப்பை: பயிற்சியில் பட்டைய கிளப்பும் ரிஷப் பண்ட், ஜடேஜா..! பதற்றத்தில் பாகிஸ்தான்.. வைரல் வீடியோ

By karthikeyan VFirst Published Aug 26, 2022, 6:57 PM IST
Highlights

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 தொடங்கும் நிலையில், 28ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். பயிற்சியில் ரிஷப்  பண்ட்டும், ரவீந்திர ஜடேஜாவும் பெரிய ஷாட்டுகளை அபாரமாக ஆடும் வீடியோ வைரலாகிவருகிறது.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஆசிய கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் 28ம் தேதி துபாயில் நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, ஆசிய கோப்பையில் பழிதீர்க்கும் முனைப்பில் உள்ளது. 

அதற்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து, இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி காயம் காரணமாக ஆசிய கோப்பையில் ஆடவில்லை. இது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு.

இதையும் படிங்க - ரோஹித் - டிராவிட்டின் ஸ்மார்ட்டான மூவ் இதுதான்! உலகின் தலைசிறந்த பவுலருக்கு கம்பேக் வாய்ப்பு - சக்லைன் முஷ்டாக்

இந்திய அணியிலும் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் காயத்தால் ஆடாதபோதிலும், அவர்களை ஈடுகட்டும் அளவிற்கான பென்ச் வலிமை இந்திய அணியிடம் உள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணியின் பென்ச் வலிமை பலவீனமாக உள்ளது. எனவே ஆசிய கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்வது பாகிஸ்தானுக்கு கடும் சவாலாக இருக்கும்.

இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள் (ஒரு ஆல்ரவுண்டர்) மற்றும் 5பவுலர்கள் என்ற காம்பினேஷனுடன் களமிறங்கும். ஹர்திக் பாண்டியா 6வது பவுலிங் ஆப்சனாக இருப்பதைத்தான் இந்திய அணி நிர்வாகம் விரும்பும். எனவே விக்கெட் கீப்பருக்கான இடத்திற்கு ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவர்தான் தேர்வு செய்யப்படுவார். இதற்கு முன் கோலி, சூர்யகுமார், ராகுல் ஆடாத போட்டிகளில் தினேஷ் கார்த்திக் ஃபினிஷராக ஆடிக்கொண்டிருந்தார். 

இப்போது 3ம் வரிசையில் கோலி, 4ம் வரிசையில் சூர்யகுமார், 5ம் வரிசையில் ஹர்திக் பாண்டியா ஆடுவதால் 6ம் வரிசையில் ஒருவருக்குத்தான் இடம் உள்ளது. அந்த இடம் ரிஷப் பண்ட்டுக்குத்தான். அதன்பின்னர் ஸ்பின் ஆல்ரவுண்டர் ஜடேஜா 7ம் வரிசையில் ஆடுவார்.

இதையும் படிங்க - Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவன்.! ஆசை காட்டி மோசம் செய்யப்பட்ட சீனியர் வீரர்

எனவே நன்றாக போட்டிகளை முடித்துக்கொடுத்து கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் ஆடும் லெவனில் இடம்பெறாதபட்சத்தில், ரிஷப் பண்ட் - ஜடேஜா ஆகிய இருவரும் தான் ஃபினிஷிங் ரோலை செய்தாக வேண்டும். அதற்காக இருவருமே வலைப்பயிற்சியில் தீவிரமாக தயாராகிவருகின்றனர். 

பயிற்சியில் ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா  ஆகிய இருவருமே பெரிய ஷாட்டுகளை ஆடி அசத்திக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் ஃபினிஷிங் ரோலை செய்யவேண்டிய சூழல் ஏற்படும்பட்சத்தில் அதற்கு தயாராக இருக்கும் வகையில்,  தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

Whack Whack Whack at the nets 💥 💥, courtesy & 👌👌 | | pic.twitter.com/FNVCbyoEdn

— BCCI (@BCCI)
click me!