ஆண்டர்சன் - பிராட் கூட்டணி அபார பவுலிங்! 2வது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்காவை சொற்ப ரன்களுக்கு சுருட்டிய இங்கி.,

By karthikeyan VFirst Published Aug 25, 2022, 9:34 PM IST
Highlights

2வது  டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியை முதல் இன்னிங்ஸில் வெறும் 151 ரன்களுக்கு சுருட்டியது.
 

தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இதையும் படிங்க - Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இங்கிலாந்து மண்ணில் தனது 100வது டெஸ்ட்டில் ஆடிவரும் இங்கிலாந்தின்  சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அபாரமாக பந்துவீசினார். தொடக்க வீரர் எர்வீயை 3ரன்னில் ஆண்டர்சன் வீழ்த்த, மற்றொரு தொடக்க வீரரான டீன் எல்கர் (12) மற்றும் 3ம் வரிசை வீரர் கீகன் பீட்டர்சன் (21) ஆகிய இருவரையும் ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தினார்.

அடுத்தடுத்து மற்ற வீரர்களும் வரிசையாக நடையை கட்ட, 108 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது தென்னாப்பிரிக்க அணி. ஆனால் 9வது விக்கெட்டுக்கு டெயிலெண்டரான ககிசோ ரபாடா சிறப்பாக பேட்டிங் ஆடி 36 ரன்கள் அடித்தார். ரபாரா 36 ரன்களுக்கும், நோர்க்யா 10 ரன்களுக்கும் வெளியேற, முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி வெறும் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையும் படிங்க -  Asia Cup:இந்திய அணியில் ஆவேஷ் கானுக்கு பதிலா கண்டிப்பா அவரைத்தான் எடுத்திருக்கணும்! லக்‌ஷ்மிபதி பாலாஜி விளாசல்

இங்கிலாந்து அணி சார்பில் சீனியர்  பவுலர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 

click me!