டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்..!

By karthikeyan VFirst Published Aug 25, 2022, 6:19 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஆடிவரும் இங்கிலாந்து சீனியர் ஃபாஸ்ட் பவுலர்  ஜேம்ஸ் ஆண்டர்சன் வரலாற்று சாதனை படைத்துள்ளார். 
 

இங்கிலாந்து அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 2003ம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிவரும் ஆண்டர்சன், 19 ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக அளப்பரிய பங்காற்றியிருக்கிறார்.

174 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 658 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஆண்டர்சனுக்கு 40 வயதாகிவிட்டபோதிலும், இப்போதும் இங்கிலாந்துக்காக ஆடிவருகிறார்  ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இதையும் படிங்க - ஆசிய கோப்பை 2022: பயிற்சியில் அஷ்வின், சாஹலின் பவுலிங்கை அடி வெளுத்து வாங்கிய விராட் கோலி..! வைரல் வீடியோ

ஒரு ஃபாஸ்ட் பவுலராக இவ்வளவு நீண்ட கெரியர் அளப்பரிய சாதனை ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் (800) மற்றும் ஷேன் வார்ன் (708) ஆகிய 2 லெஜண்ட் ஸ்பின்னர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளார் ஆண்டர்சன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆண்டர்சன்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மான்செஸ்டரில் இங்கிலாந்து ஆடிவரும் 2வது டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து மண்ணில் இது ஜேம்ஸ் ஆண்டர்சனின் 100வது டெஸ்ட்போட்டி. இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட நாட்டில் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இதையும் படிங்க - ஆசிய கோப்பையை எந்த அணி வெல்லும்..? ஷேன் வாட்சன் ஆருடம்

ஆண்டர்சனுக்கு அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். இந்தியாவில் சச்சின் டெண்டுல்கர் 94 டெஸ்ட் போட்டிகளிலும், ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலியாவில் 92 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியுள்ளனர். ஆண்டர்சனுக்கு அடுத்த 2 இடங்களில் சச்சினும் பாண்டிங்கும் உள்ளனர்.
 

click me!