டைமண்ட் லீக் தடகள போட்டி : ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா 2ஆவது இடம்!

By Rsiva kumar  |  First Published Sep 1, 2023, 11:29 AM IST

சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் நடந்த டைமண்ட் லீக் தடகள போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2ஆவது இடம் பிடித்துள்ளார்.


ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்டில் 19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கான இறுதிசுற்று நடந்தது. இந்தப் போட்டியில், முதல் முயற்சியிலேயே 88.77 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்து நீரஜ் சோப்ரா சாதனை படைத்தார்.

ஷாஹீன் அஃப்ரிடி இருந்தால் என்ன, இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் – சவுரவ் கங்குலி!

Tap to resize

Latest Videos

பாகிஸ்தானை சேர்ந்த ஹர்ஷத் 87.82 மீட்டர் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தையும், செக் குடியரசை சேர்ந்த யாகூப் 86.67 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2ஆவது முறையாக தங்கப்பதக்கம் வெல்லும் இந்திய வீரர் என்கின்ற பெருமையை நம் இந்திய நாட்டிற்கு தேடித் தந்துள்ளார் நீரஜ் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வராஜ் டிராக்டர்களின் பிராண்ட் அம்பாசிடராக தோனிக்கு வரவேற்பு- ஆனந்த் மஹிந்திரா!

இதற்கு முன்னதாக கடந்த 2003 ஆம் ஆண்டு நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்ற அஞ்சு பார்பி ஜார்ஜ் இந்தியாவிற்கு ஒரு வெண்கல பதக்கத்தை வென்று கொடுத்தார். அதன் பிறகு சுமார் 19 ஆண்டுகள் கழித்து உலக அரங்கில் இந்தியாவிற்கு இந்த மாபெரும் கிடைத்துள்ளது. மேலும் ஒலிம்பிக் உலக தடகள சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

BAN vs SL: சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா நிதான ஆட்டம்; தொடர்ந்து 11 போட்டிகளில் வெற்றி பெற்று இலங்கை சாதனை!

இந்த நிலையில், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி முடிந்த நிலையில், டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்றார். சுவிட்சர்லாந்திலுள்ள சூரிச் நகரில் நடந்த இந்த தடகள போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட நீரஜ் சோப்ரா முதல் முயற்சியில் 80.79 மீட்டர் தொலைவு ஈட்டியை எறிந்தார். அடுத்த 2 முறை பவுல் ஏற்பட்ட நிலையில் 4வது முயற்சியில் 85.22 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தார். 5வது முயற்சியிலும் பவுல் ஆக நீரஜ் சோப்ரா பின்னடைவை அடைந்தார். இறுதியாக, நீரஜ், 85.71 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2வது இடத்திற்கு முன்னேறினார். இதே போன்று ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 7.99 மீட்டர் தூரம் தாண்டி 5ஆவது இடம் பிடித்தார்.

India vs Pakistan: இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு!

click me!