
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரர் நடால், ரஷியாவின் ஷரபோவா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பிரெஞ்சு ஓபன் போட்டிகள் வரும் 27-ஆம் தேதி தொடங்குகின்றன. இதில் 10 முறை சாம்பியன் பட்டம் வென்ற நடால் தற்போது 11-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளார்.
ஆனால், 21 வயதான வெரேவ் அவருக்கு சவாலை உண்டாக்குவார். இத்தாலி ஓபன் போட்டியில் நடாலுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார்.
அண்மையில் நடந்த இத்தாலி ஓபன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் வெரேவே கடுமையாக போராடி வென்றார் நடால். ஆனால், மாட்ரிட் ஓபன் போட்டியில் வெரேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கடந்த 81 ஆண்டுகளாக ஜெர்மனி வீரர் எவரும் வெல்லவில்லை. அந்த குறையைப் போக்கும் வகையில் வெரேவ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று, இரண்டு முறை பிரெஞ்ச் ஓபன் உள்பட 5 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்ற ரஷியாவின் ஷரபோவா மீண்டும் பிரெஞ்சு ஓபனில் களம் காண்கிறார்.
போதை மருந்து பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் 15 மாதங்கள் அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தடைக்காலம் முடிவடைந்து மாட்ரிட் ஓபன், இத்தாலி ஓபன் உள்பட பல்வேறு போட்டிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.
பிரெஞ்ச் ஓபனில் அவருக்கு நேரடி நுழைவு அனுமதி தர முடியாது என அமைப்பாளர்கள் கூறி இருந்தனர்.
ஏடிபி தரவரிசையில் 173-வது இடத்தில் இருந்த ஷரபோவா, பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடிதின் மூலம் முதல் 30 இடங்களுக்குள் வந்துவிட்டார். இதன் மூலம் பிரெஞ்ச் ஓபன் வீரர்கள் வரிசைப் பட்டியலில் ஷரபோவாவும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.