
பிரபல பாலிவுட் நடிகையான ப்ரீத்தி சிந்தா, பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஓனர்களில் ஒருவர். சமீபத்தில் இவர் குறித்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியது. அந்த வீடியோவில் மிகவும் சந்தோஷமாக ப்ரீத்தி சிந்தா சிரிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
மேலும் அதில் பிரீத்தி சிந்தா தனக்கு அருகில் இருந்தவரிடம், மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறப் போவதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. என கூறியதாகவும் ஒரு தகவல் வெளியாகியது. அதனை தொடர்ந்து மும்மை இந்தியன்ஸ் ரசிகர்கள், ப்ரீத்தி சிந்தாவை திட்டி தீர்த்துவிட்டனர்.
இதனால் நொந்து போன ப்ரீத்தி சிந்தா நான் அப்படியெல்லம் ஒன்றும் சந்தோஷப்படவில்லை. மும்பையிடம் விளையாடும்போது வேண்டுமானால் நான் அவ்வாறு சந்தோஷப்படுவேன்.
மற்றபடி நாங்கள் பிளே ஆஃபிற்கு செல்லவில்லை என்பதற்காக, அவர்களும் செல்லக்கூடாது என்றெல்லாம், நான் ஒரு நாளும் நினைத்ததில்லை. எனக் கூறியிருக்கிறார். நாங்க தான் பாத்தோமே உங்க அக்கறையை. என அதற்கும் கேலியாக விமர்சித்திருக்கின்றனர், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.