நானா ஒதுங்கல.. என்னை ஒதுக்கிட்டாங்க!! காம்பீர் வெளியிட்ட பகீர் தகவல்

First Published May 22, 2018, 4:44 PM IST
Highlights
gambhir opinion about dd denied place for him in playing eleven


டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேனே தவிர, அணியில் ஆட தயாராகவே இருந்ததாக டெல்லி வீரர் கௌதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஐபிஎல் கோப்பையை ஒருமுறை கூட வென்றிராத டெல்லி அணி, இந்த முறையாவது கோப்பையை வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது. ஆனால் இந்த முறையும் அந்த அணியின் எண்ணம் ஈடேறாமல் போய்விட்டது.

14 லீக் போட்டிகளில் 5ல் வெற்றியுடன் 10 புள்ளிகளை பெற்று, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இந்த சீசனின் தொடக்கம் டெல்லி அணிக்கு சரியாக அமையவில்லை. கவுதம் காம்பீரின் கேப்டன்சியில் ஆடிய முதல் 6 போட்டிகளில் 5ல் டெல்லி அணி தோல்வியை தழுவியது. அந்த போட்டிகளில் காம்பீர் பேட்டிங்கும் சரியாக ஆடவில்லை. அதனால் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியை ராஜினாமா செய்த காம்பீர், தனது ஊதியத்தையும் விட்டுக்கொடுப்பதாக அறிவித்து அதிர்ச்சியளித்தார். 

கொல்கத்தா அணிக்கு இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த காம்பீரின் நிலையும் அவரது முடிவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

காம்பீர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு, ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தொடக்க வீரராக பிரித்வி ஷா களமிறக்கப்பட்டார். அதன்பிறகு ஒரு போட்டியில் கூட காம்பீர் ஆடவில்லை. அணியில் ஆடவில்லை என்ற முடிவை காம்பீர் தான் எடுத்ததாக ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்திருந்தார். அண்மையில் ரிக்கி பாண்டிங்கும் அதையே தான் தெரிவித்தார்.

இந்நிலையில், தான் அணிக்காக ஆட தயாராக இருந்ததாக காம்பீர் கூறியுள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காம்பீர், அணியின் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன். ஆனால் அணிக்காக ஆட தயாராகவே இருந்தேன். ஆனால் ஆடும் லெவனில் நான் இடம்பெறவில்லை. நான் விளையாட தயாராக இருந்தது பாண்டிங்கிற்கும் தெரியும் என கூறி அதிர்ச்சியளித்துள்ளார். 
 

click me!