தோனி இருக்கும் ஐபிஎல் அணியில் வேறு கேப்டனா..? ரசிகர்கள் அதிர்ச்சி

Asianet News Tamil  
Published : May 22, 2018, 03:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
தோனி இருக்கும் ஐபிஎல் அணியில் வேறு கேப்டனா..? ரசிகர்கள் அதிர்ச்சி

சுருக்கம்

dhoni is not the captain for ipl dream team

ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிந்துவிட்டன. ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுள்ளன. 

முதல் தகுதி சுற்று போட்டி சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், கிரிக் இன்ஃபோ என்ற ஸ்போர்ட்ஸ் இணையதளம், ஐபிஎல் கனவு அணியை வெளியிட்டுள்ளது. 

அந்த அணி விவரம்:

லோகேஷ் ராகுல் (பஞ்சாப்), சுனில் நரைன் (கொல்கத்தா), கேன் வில்லியம்சன் (கேப்டன், ஐதராபாத்), அம்புதி ராயுடு (சென்னை), ரி‌ஷப்பண்ட் (டெல்லி), தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா), தோனி (விக்கெட் கீப்பர், சென்னை), ரஷீத் கான் (ஐதராபாத்), ஆண்ட்ரூ டை (பஞ்சாப்), உமேஷ் யாதவ் (பெங்களூர்), பும்ரா (மும்பை)

இந்த அணியில், சிஎஸ்கே அணி வீரர்கள் தோனி மற்றும் ராயுடு ஆகிய இருவரும் உள்ளனர். இந்த கனவு அணியில் தோனி இருந்தும் கேப்டனாக வில்லியம்சன் குறிப்பிடப்பட்டுள்ளார்.

சென்னை அணிக்கு இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் தோனி. இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு இந்த சீசனில் களமிறங்கி, பிளே ஆஃபிற்கு வெற்றிகரமாக அழைத்து சென்ற தோனி, ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன். ஆனால் அவரை அணியில் வைத்துக்கொண்டு வில்லியம்சனை கேப்டனாக தேர்வு செய்தது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கனவு அணியாகவே இருந்தாலும், தோனி இருக்கும் அணியில் அவர் தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம்.

கடந்த ஐபிஎல்லில் புனே அணிக்காக தோனி ஆடியபோது அந்த அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் தலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது. அப்போதே ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து